சினிமா

“குருநாதா இங்கேயும் வந்துட்டீங்களா!” : சந்திரமுகி 2-விலும் 30 அடி நீள பாம்பு - ட்ரெய்லர் எப்படி இருக்கு?

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

“குருநாதா இங்கேயும் வந்துட்டீங்களா!” : சந்திரமுகி 2-விலும் 30 அடி நீள பாம்பு - ட்ரெய்லர் எப்படி இருக்கு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மலையாளத்தில் ஷோபனா, மோகன்லால் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'மணிச்சித்ரதாழு'. இந்த படம் அங்கு பெரிய ஹிட் கொடுத்த நிலையில், இதனை தமிழில் இயக்குநர் பி.வாசு 'சந்திரமுகி' என்ற பெயரில் இயக்கினார்.

கடந்த 2005-ல் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வினீத், வடிவேலு, ஷீலா, நாசர், கே.ஆர். விஜயா, மாளவிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். பாடலும் படமும் பெரிய அளவில் மாஸ் ஹிட் கொடுத்த நிலையில், அப்போதே இதன் வசூல் 75 கோடி தாண்டி அள்ளிக் குவித்தது.

“குருநாதா இங்கேயும் வந்துட்டீங்களா!” : சந்திரமுகி 2-விலும் 30 அடி நீள பாம்பு - ட்ரெய்லர் எப்படி இருக்கு?

திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழகத்தில் சுமார் 890 நாட்கள் தியேட்டரில் திரையிடப்பட்டு பெரிய சாதனையை செய்தது. இன்றளவும் நின்று பேசப்பட்டு, ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்ட இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு இதன் அடுத்த பாகம் வெளியாகவுள்ளது.

“குருநாதா இங்கேயும் வந்துட்டீங்களா!” : சந்திரமுகி 2-விலும் 30 அடி நீள பாம்பு - ட்ரெய்லர் எப்படி இருக்கு?

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், வடிவேலு, ராதிகா, ரவி மரியா, லட்சுமி மேனன், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சந்திரமுகி படத்தை இயக்கிய பி.வாசு இயக்கியுள்ளார்; RRR படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.

“குருநாதா இங்கேயும் வந்துட்டீங்களா!” : சந்திரமுகி 2-விலும் 30 அடி நீள பாம்பு - ட்ரெய்லர் எப்படி இருக்கு?

இந்த படத்தின் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் இதன் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ஆர்வம் எழுந்தது. வரும் செப்டெம்பர் 15-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இதன் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சென்னை எக்ஸ்பிரெஸ் அவென்யூவில் இந்த படத்தின் ட்ரெய்லர் விழா இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் சந்திரமுகி 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

“குருநாதா இங்கேயும் வந்துட்டீங்களா!” : சந்திரமுகி 2-விலும் 30 அடி நீள பாம்பு - ட்ரெய்லர் எப்படி இருக்கு?

ட்ரைலர் எப்படி இருக்கிறது ?

சந்திரமுகி 1 படத்தின் தொடர்ச்சியாக கருதப்பட்டாலும் பழைய நடிகர்களில் வடிவேலு அதே முருகேசனாக தோன்றுகிறார். மேலும் அவரோடு சேர்ந்து 30 அடி நீள பாம்பும் மட்டுமே இந்த படத்தில் இருக்கிறது. மீதி அனைவரும் புது நடிகர்கள் ஆவர். வழக்கமாக இதில் ராகவா லாரன்சுக்கு என்று 3 நடிகைகள் உள்ளனர். அதில் யார் யார் என்னென்ன கதாபாத்தியாம் என்று படம் வெளியான பிறகே தெரியவரும்.

“குருநாதா இங்கேயும் வந்துட்டீங்களா!” : சந்திரமுகி 2-விலும் 30 அடி நீள பாம்பு - ட்ரெய்லர் எப்படி இருக்கு?

மேலும் அதே சந்திரமுகி இன்னும் போகாமல் அதே வீட்டில் வேட்டையனை பழிவாங்க காத்து இருக்கிறார். அநேகமாக முன் ஜென்மத்தில் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் இருந்திருப்பார். அதன் எதிரொலியாகவே இதில் இவர் வேட்டையன் கதாபாத்திரத்தில் இணைந்திருக்கிறார். இந்த முறையாவது உண்மையாகவே வேட்டையனை பழிவாங்குவாரா? சந்திரமுகி ஆன்மா முழுமையாக சாந்தியடையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories