சினிமா

“மரண பயம்” : ‘சந்திரமுகி 2’ இப்படி தான் இருக்கு - படம் பார்த்தவரின் முதல் விமர்சனம்.. குஷியில் ரசிகர்கள்!

சந்திரமுகி 2-வின் கதாபாத்திரங்கள் இரவு முழுவது தூங்கவிடாமல் பயமுறுத்தும் வகையில் இருப்பதாக இசையமைப்பாளர் கீரவாணி தெரிவித்துள்ளார்.

“மரண பயம்” : ‘சந்திரமுகி 2’ இப்படி தான் இருக்கு - படம் பார்த்தவரின் முதல் விமர்சனம்.. குஷியில் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மலையாளத்தில் ஷோபனா, மோகன்லால் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'மணிச்சித்ரதாழு'. இந்த படம் அங்கு பெரிய ஹிட் கொடுத்த நிலையில், இதனை தமிழில் இயக்குநர் பி.வாசு 'சந்திரமுகி' என்ற பெயரில் இயக்கினார்.

கடந்த 2005-ல் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வினீத், வடிவேலு, ஷீலா, நாசர், கே.ஆர். விஜயா, மாளவிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். பாடலும் படமும் பெரிய அளவில் மாஸ் ஹிட் கொடுத்த நிலையில், அப்போதே இதன் வசூல் 75 கோடி தாண்டி அள்ளிக் குவித்தது.

“மரண பயம்” : ‘சந்திரமுகி 2’ இப்படி தான் இருக்கு - படம் பார்த்தவரின் முதல் விமர்சனம்.. குஷியில் ரசிகர்கள்!

திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழகத்தில் சுமார் 890 நாட்கள் தியேட்டரில் திரையிடப்பட்டு பெரிய சாதனையை செய்தது. இன்றளவும் நின்று பேசப்பட்டு, ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்ட இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு இதன் அடுத்த பாகம் வெளியாகவுள்ளது.

“மரண பயம்” : ‘சந்திரமுகி 2’ இப்படி தான் இருக்கு - படம் பார்த்தவரின் முதல் விமர்சனம்.. குஷியில் ரசிகர்கள்!

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், வடிவேலு, ராதிகா, ரவி மரியா, லட்சுமி மேனன், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சந்திரமுகி படத்தை இயக்கிய பி.வாசு இயக்கியுள்ளார்; RRR படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

“மரண பயம்” : ‘சந்திரமுகி 2’ இப்படி தான் இருக்கு - படம் பார்த்தவரின் முதல் விமர்சனம்.. குஷியில் ரசிகர்கள்!

தொடர்ந்து இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியதையடுத்து, அவர் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார். அதோடு கங்கனா இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரம் முந்தைய பகுதியில் ஜோதிகா கதாபாத்திரமான 'கங்கா'வை விட அதிகம் பேசப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. தற்போது இதனை போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் இந்த படத்தின் அப்டேட் குறித்து படக்குழு தகவல் எதுவும் வெளியிடவில்லை. மேலும் இதன் டீசர், ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

“மரண பயம்” : ‘சந்திரமுகி 2’ இப்படி தான் இருக்கு - படம் பார்த்தவரின் முதல் விமர்சனம்.. குஷியில் ரசிகர்கள்!
“மரண பயம்” : ‘சந்திரமுகி 2’ இப்படி தான் இருக்கு - படம் பார்த்தவரின் முதல் விமர்சனம்.. குஷியில் ரசிகர்கள்!

இந்த நிலையில் இந்த படத்தின் கீரவாணி சந்திரமுகி 2 படம் குறித்து தனது முதல் விமர்சனத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சந்திரமுகி 2 படம் பார்த்தேன். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தில் தூக்கமில்லாத இரவுகளை கொடுக்கிறது.

என் முயற்சியால் மனதைக் கவரும் காட்சிகளுக்கு நல்ல இசையை கொடுத்துள்ளேன். இரண்டு மாதங்களாக சரியாக தூங்காமல் முழுவதுமாக உழைத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். சந்திரமுகி 2 படம் வரும் செப்டம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories