தமிழ்நாடு

16 வயது வடமாநில சிறுவனுக்கு பாலியல் தொல்லை : காவல்துறை DSP போக்சோ சட்டத்தில் கைது

சென்னை வண்டலூர் அருகே 16 வயதுச் சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து காவல்துறை டி.எஸ்.பி. போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 வயது வடமாநில சிறுவனுக்கு பாலியல் தொல்லை : காவல்துறை DSP போக்சோ சட்டத்தில் கைது
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே அமைந்துள்ள காவலர் பயிற்சி மைய வளாகத்தில், காவலர்களுக்குப் பயிற்சி அளித்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தன் என்பவர், அதே வளாகத்தில் உள்ள உணவுக் கூடத்தில் பணியாற்றி வந்த 16 வயது வடமாநிலச் சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில், போக்சோசட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரியே இத்தகைய செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

மேலும், காவல்துறை பயிற்சி மைய வளாகத்திற்குள்ளேயே, சட்டவிதிகளுக்குப் புறம்பாகவும் குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டங்களுக்கு மாறாகவும் 16 வயதுச் சிறுவனை உணவுக் கூடத்தில் வேலைக்கு அமர்த்தியது யார்? இதற்குப் பின்னணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் யார்? என்ற பல்வேறு கேள்விகளும் தற்போது தீவிரமாக எழுந்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுவனுக்குத் தேவையான பாதுகாப்பும் சட்ட உதவியும் வழங்கப்படுவதோடு, சிறுவனை வேலைக்கு அமர்த்தியவர்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

banner

Related Stories

Related Stories