சினிமா

“ரூ.25 கோடியா?.. யாரோ உங்கள ஏமாத்துறாங்க..” : சமந்தாவின் கலகல REPLAYக்கான காரணம் என்ன ?

மயோசிட்டிஸ் பாதிப்பு சிகிச்சைக்காக ரூ. 25 கோடி சமந்தா கடன் வாங்கியதாக வெளியான தகவலுக்கு தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.

“ரூ.25 கோடியா?.. யாரோ உங்கள ஏமாத்துறாங்க..” : சமந்தாவின் கலகல REPLAYக்கான காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவர், அத்தனை மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். சினிமா ஒரு புறம் இருக்க, காதலும் ஒரு புறம் இருந்தது. பல ஆண்டுகளாக இவரும் பிரபல தெலுங்கு திரை நட்சத்திரமான நாக சைதன்யாவும், காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

சுமூகமாக இருந்த இவர்களது உறவு கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இருவரும் அவர்களது தனித்தனி வாழ்க்கையில் சினிமா, சீரிஸ் என்று மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியில் வெளியான 'The Family Man' சீரிஸின் மூலம் பாலிவுட்டில் சமந்தா மிகவும் பிரபலமானார் . இவர்களின் விவாகரத்திற்கு இந்த சீரிஸும் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

“ரூ.25 கோடியா?.. யாரோ உங்கள ஏமாத்துறாங்க..” : சமந்தாவின் கலகல REPLAYக்கான காரணம் என்ன ?

தொடர்ந்து, தற்போது தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், தனது தனிப்பாதையில் மூவிஸ், சீரிஸ் என நடித்து வருகிறார். இந்த சூழலில் இவரது நடிப்பில் வரும் கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி பான் இந்தியா படமாக வெளியான 'யசோதா' திரைப்படத்தின் டப்பிங்கின் போது தனக்கு மயோசிடிஸ் (Myositis) என்ற ஆட்டோ இம்யூனே பிரச்னை (autoimmune disorder) உள்ளதாக தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதோடு தான் இதற்கு தொடர் சிகிச்சை எடுத்து வருவதாகவும், விரைவில் குணமடைந்து விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

“ரூ.25 கோடியா?.. யாரோ உங்கள ஏமாத்துறாங்க..” : சமந்தாவின் கலகல REPLAYக்கான காரணம் என்ன ?

இதனையறிந்த ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்த ஆறுதல் தெரிவித்தனர். அதோடு விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வரும் இவர், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது சமந்தா, விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் நடிப்பில் 'குஷி' என்ற படம் உருவாக்கி வருகிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த படத்துக்கு பிறகு சமந்தா நடிப்பில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியானது. மேலும் தனது சிகிச்சைக்காக முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவரிடமிருந்து ரூ.25 கோடி ரூபாய்க் கடன் வாங்கியதாகவும் செய்திகள் வெளியானது. இது வெளியாகி பேசுபொருளான நிலையில், தற்போது இதற்கு சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.

“ரூ.25 கோடியா?.. யாரோ உங்கள ஏமாத்துறாங்க..” : சமந்தாவின் கலகல REPLAYக்கான காரணம் என்ன ?

இது குறித்து நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் "மயோசிடிஸ் சிகிச்சைக்கு ரூ.25 கோடியா? அப்படியென்றால் உங்களை யாரோ ஏமாற்றியிருக்கின்றனர் என்றுதான் அர்த்தம். அதை விடக் குறைவான பணத்தைத்தான் என் சிகிச்சைக்காகச் செலவு செய்தேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. என்னுடைய கரியரில் நான் என் உழைப்பு மூலமாகவே அதிக அளவில் சம்பாதித்துள்ளேன். அதனால், என்னால் என்னைப் பார்த்துக்கொள்ள முடியும். நன்றி"

மயோசிடிஸ் என்பது ஒரு உடல்நலப் பிரச்னை. இந்த பிரச்னையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அதனால் சிகிச்சைத் தொடர்பாகச் செய்திகளை வெளியிடும்போது சற்று பொறுப்புடன் இருங்கள். நோய் மற்றும் சிகிச்சை குறித்த பயத்தை விதைக்காதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories