சினிமா

“மத்தவங்க சொல்லுறாங்கனு நா பண்ணனும்னு அவசியமில்ல..” - திருமணம் குறித்து 36 வயது ரஜினி பட நடிகை Open Talk!

சரியான நபரை சந்தித்ததும் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.

“மத்தவங்க சொல்லுறாங்கனு நா பண்ணனும்னு அவசியமில்ல..” - திருமணம் குறித்து 36 வயது ரஜினி பட நடிகை Open Talk!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹூமா குரேஷி. 2012-ல் Gangs of Wasseypur – Part 1-ல் அறிமுகமான இவர் அது நல்ல வரவேற்பை எட்டவே, அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வந்தது. தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வந்த இவர், பின்னர் மராத்தி மொழியிலும் நடித்தார். இதைத்தொடர்ந்து மலையாளம், ஆங்கிலம், தமிழிலும் அறிமுகமானார்.

“மத்தவங்க சொல்லுறாங்கனு நா பண்ணனும்னு அவசியமில்ல..” - திருமணம் குறித்து 36 வயது ரஜினி பட நடிகை Open Talk!

கடந்த 2018-ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான படம் தான் 'காலா'. இதில் ரஜினியின் முன்னாள் காதலியாக 'ஜரீனா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தமிழில் இதன்மூலம் இவர் வரவேற்பையும் பெற்றார். பின்னர் கடந்த 2022-ல் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' படத்திலும் நடித்தார்.

“மத்தவங்க சொல்லுறாங்கனு நா பண்ணனும்னு அவசியமில்ல..” - திருமணம் குறித்து 36 வயது ரஜினி பட நடிகை Open Talk!

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், மகாராணி என்ற சீரிஸில் நடித்து மேலும் வரவேற்பை பெற்றார். பீகாரில் முன்னாள் முதலமைச்சர் பீமாவின் மனைவி ராணி எவ்வாறு அரசியலில் நுழைந்தார் என்ற கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த சீரிஸ் 2 பாகங்களாக வெளியாகியுள்ளது.

இதனிடையே இவர் திரைப்படத் தயாரிப்பாளர் முடாசர் அஜீஸை காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளியாகின. இதையடுத்து இதுகுறித்து அவர்கள் எதுவும் தெரிவிக்காத நிலையில், இருவரும் பிரேக் அப் செய்ததாகவும் செய்திகள் வெளியாகின.

“மத்தவங்க சொல்லுறாங்கனு நா பண்ணனும்னு அவசியமில்ல..” - திருமணம் குறித்து 36 வயது ரஜினி பட நடிகை Open Talk!

தற்போது 36 வயதாகும் ஹூமா குரேஷிக்கு திருமணம் எப்போது என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அண்மையில் 'Ask Me Anything' என்று இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு இவர் பதிலளித்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் இவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் அளித்த பதில் பாலிவுட்டில் வைரலாகி வருகிறது.

“மத்தவங்க சொல்லுறாங்கனு நா பண்ணனும்னு அவசியமில்ல..” - திருமணம் குறித்து 36 வயது ரஜினி பட நடிகை Open Talk!

இதுகுறித்து அவர் அளித்த பதிலானது, “நான் சரியான நபரைச் சந்தித்ததும் அவரைக் காதலித்து, அந்த உறவு எனக்குச் சரியென பட்டதும் திருமணம் செய்து கொள்வேன். 'எப்போது நான் திருமணம் செய்துகொள்வேன்' என்ற கேள்வி தொடர்ந்து என்னிடம் எழுப்பப்பட்டு வருகிறது. சினிமா துறையில் இருப்பவர்கள் திருமணம் செய்துகொள்வதாலோ அல்லது என்னைப் பற்றி தொடர்ந்து கேட்கப்படுவதனாலோ திருமணம் செய்து கொள்வதற்கான அழுத்தத்தை நான் உணரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories