சினிமா

திரையரங்கு & OTT.. பிரபு தேவா முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை.. இன்று வெளியாகும் படங்கள் பட்டியல் இதோ !

இன்று திரையரங்கு மற்றும் ஓடிடியில் எந்தெந்த தமிழ் படங்கள் வெளியாகியுள்ளது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

திரையரங்கு & OTT.. பிரபு தேவா முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை.. இன்று வெளியாகும் படங்கள் பட்டியல் இதோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலகட்டத்தில் பல்வேறு மொழிப்படங்களையும் மக்கள் ரசிக்கிறார்கள். உலகம் முழுக்க நாள்தோறும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும் குறைந்தது ஒரு படமாவது வெளியாகும். அந்த வகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு திரைப்படம் வெளியானால், கூடவே இன்னும் ஒரு படமாவது வெளியாகும்.

அதிலும் பண்டிகை காலக்கட்டத்தில் சொல்லவே வேண்டாம்.. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி திரை ரசிகர்களுக்கு ஆரவாரத்தை ஏற்படுத்துவர். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் 2 பெரிய நடிகர்களின் படங்கள் வாரிசு - துணிவு நேரடியாக மோதியது. இதனால் சில படங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

திரையரங்கு & OTT.. பிரபு தேவா முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை.. இன்று வெளியாகும் படங்கள் பட்டியல் இதோ !

இதையடுத்து வழக்கம்போல் தற்போது படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கடந்த மாதம் 25-ம் தேதி ஷாருக் நடிப்பில் 'பதான்' படம் வெளியானது. இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது திரையரங்கில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து கடந்த மாதம் (பிப்ரவரி) திரையரங்குகளில் பல்வேறு படங்கள் வெளியாகியுள்ளது.

திரையரங்கு & OTT.. பிரபு தேவா முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை.. இன்று வெளியாகும் படங்கள் பட்டியல் இதோ !

அதே போல் தற்போது மார்ச் மாதம் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாதத்தில் முதல் வாரத்தில் எந்தெந்த படங்கள் திரையரங்கில் வெளியாகவுள்ளது. அதன் பட்டியல் இதோ :

மார்ச் 03 :

=> அயோத்தி : -

சசிகுமார், பிரீத்தி அஸ்ரானி, யஷ்பால் சர்மா, புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ராகுநந்தன் இசையமைத்திருக்கும் இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

திரையரங்கு & OTT.. பிரபு தேவா முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை.. இன்று வெளியாகும் படங்கள் பட்டியல் இதோ !

=> பஹீரா :-

பிரபுதேவா, அமைரா தஸ்தூர், கோபிநாத் ரவி, ரம்யா நம்பீசன், ஜனனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதன் ட்ரைலர் கடந்த ஆண்டே வெளியான நிலையில், இந்த படத்தின் அப்டேட் குறித்து எந்த தகவலும் வெளி வராமல் இருந்தது. கிரைம் திரில்லர் சைக்கோ ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.

திரையரங்கு & OTT.. பிரபு தேவா முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை.. இன்று வெளியாகும் படங்கள் பட்டியல் இதோ !
ADMIN

=> பல்லு படாம பாத்துக்க : -

யூடியூப் சேனல் மூலம் பிரபலமான விஜய் வரதராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஷாரா, சஞ்சிதா ஷெட்டி, ஜெகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த படம் பல்வேறு சிக்கலில் இருந்ததால் வெளியாக தாமதமானது. இதன் ட்ரைலர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகிய நிலையில், இன்று திரையரங்கில் இந்த படம் வெளியாகியுள்ளது.

திரையரங்கு & OTT.. பிரபு தேவா முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை.. இன்று வெளியாகும் படங்கள் பட்டியல் இதோ !

=> 'தி கிரேட் இந்தியன் கிச்சன் : -

ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் மலையாள மொழியில் மாபெரும் வரவேற்பை பெற்ற படத்தின் ரீ-மேக் ஆகும். கடந்த பிப்ரவரி 3-ம் தேதி திரையில் வெளியான இந்த படம், இன்று 'Zee5' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

திரையரங்கு & OTT.. பிரபு தேவா முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை.. இன்று வெளியாகும் படங்கள் பட்டியல் இதோ !

=> தலைக்கூத்தல் : -

சமுத்திரக்கனி, கதிர் வசுந்தரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். முன்னதாக ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் 'லென்ஸ்' படத்தை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி திரையில் வெளியான இந்தப் படம், இன்று 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories