சினிமா

குலுக்களில் விழுந்த 10 லட்சம் மதிப்பு கார் யாருக்கு..? - ‘சொப்பன சுந்தரி’ ட்ரைலர் எப்படி இருக்கு ?

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

குலுக்களில் விழுந்த 10 லட்சம் மதிப்பு கார் யாருக்கு..? - ‘சொப்பன சுந்தரி’ ட்ரைலர் எப்படி இருக்கு ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.2011ம் ஆண்டு வெளியான 'அவர்களும் இவர்களும்' என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர், தனியார் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றியாளராக வந்தார்.

அதன்பிறகு அட்டத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என சில படங்களில் நடித்திருந்தாலும், 2015-ல் வெளியான 'காக்கா முட்டை' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த படத்திற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றார்.

குலுக்களில் விழுந்த 10 லட்சம் மதிப்பு கார் யாருக்கு..? - ‘சொப்பன சுந்தரி’ ட்ரைலர் எப்படி இருக்கு ?

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வரும் இவர், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படங்கம்தான் 'சொப்பன சுந்தரி'.

லாக் அப் படத்தின் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ்தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, தீபா சங்கர், கருணாகரன், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகியது. ஹியூபாக்ஸ் ஸ்டுடியோ - ஹம்சினி எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.

குலுக்களில் விழுந்த 10 லட்சம் மதிப்பு கார் யாருக்கு..? - ‘சொப்பன சுந்தரி’ ட்ரைலர் எப்படி இருக்கு ?

இந்த படம் டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது ட்ரைலர் மூலமாக அறிய முடிகிறது. மேலும் குலுக்கல் முறையில் விழுந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான காருக்கு அனைவரும் போட்டிபோட்டுகொள்கின்றனர். இதனிடையே நடக்கும் சம்பவங்கள்தான் இதன் கதையம்சமாக பார்க்கமுடிகிறது.

குலுக்களில் விழுந்த 10 லட்சம் மதிப்பு கார் யாருக்கு..? - ‘சொப்பன சுந்தரி’ ட்ரைலர் எப்படி இருக்கு ?

முழுக்க முழுக்க காரை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில், அந்த கார் ஐஸ்வர்யாவின் குடும்பத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பது ஒரு சில சீன்களில் ட்ரைலரில் காட்டப்பட்டிருக்கும். குறிப்பாக, அவர்கள் பயன்படுத்தும் நைட்டி, பாவாடை, பிளவுஸ் உள்ளிட்ட துணிகளை வைத்து காருக்கு கவர் ரெடி செய்து தூசி படாமல் பார்த்துக்கொள்வதும் ட்ரைலரில் காட்டப்பட்டிருக்கிறது.

குலுக்களில் விழுந்த 10 லட்சம் மதிப்பு கார் யாருக்கு..? - ‘சொப்பன சுந்தரி’ ட்ரைலர் எப்படி இருக்கு ?

இந்த படத்தின் ட்ரைலரில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இன்னும் தெரியவரவில்லை.

முன்னதாக டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன் ஆகிய படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இந்த 2 மாதங்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories