சினிமா

நடிகர் ரஜினிகாந்த்தை இயக்கும் 'ஜெய்பீம்' படத்தின் இயக்குநர்.. வெளியானது #தலைவர்170 படத்தின் அப்டேட் !

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தை 'ஜெய்பீம்' படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார்.

நடிகர் ரஜினிகாந்த்தை இயக்கும் 'ஜெய்பீம்' படத்தின் இயக்குநர்.. வெளியானது #தலைவர்170 படத்தின் அப்டேட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். தனது ஸ்டைலான நடிப்பால் இவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனது திரைப்பட வாழ்க்கையை 1975ம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் தொடங்கினார். அதன் பிறகு தற்போது 2023ம் ஆண்டு வரை படங்களில் நடித்து வருகிறார். இதுவரை இவரது நடிப்பில்168 படங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தை இயக்கும் 'ஜெய்பீம்' படத்தின் இயக்குநர்.. வெளியானது #தலைவர்170 படத்தின் அப்டேட் !

தற்போது 169வது படமான 'ஜெயிலர்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்கு முன்பு 'அண்ணாத்தே' படம் வெளியானது. இப்படம் நடிகர் ரஜினிகாந்த்திற்குப் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இவர் நடிக்கும் 170 படத்தின் அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், தலைவர்170 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்றும், ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞனாவேல் இப்படத்தை இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,நான்காவது முறையாக நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்க உள்ளார் அனிருத். இதற்கு முன்பு 'பேட்ட', 'தர்பார்', 'ஜெயிலர்' படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது தலைவர்170 படத்திற்கும் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தலைவர்170 படம் 2024ம் ஆண்டு திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் தலைவர்170 படத்தை த.செ.ஞானவேல் இயக்குவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே தொடங்கிவிட்டது. படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் பலர் யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.

banner

Related Stories

Related Stories