சினிமா

ஷாருக்கான் மனைவி மீது பரபர புகார்.. பதிவு செய்யப்பட்ட FIR.. - பாலிவுட்டில் அதிர்வலை.. காரணம் என்ன ?

நடிகர் ஷாருக்கானின் மனைவி மீது ஒருவர் நில மோசடி புகார் அளித்துள்ள நிலையில், அவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷாருக்கான் மனைவி மீது பரபர புகார்.. பதிவு செய்யப்பட்ட FIR.. - பாலிவுட்டில் அதிர்வலை.. காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர்தான் நடிகர் ஷாருக்கான். இவருக்கு கடந்த பல வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கெளரி என்ற மனைவி உள்ளார். இந்த கெளரி கான் ஒரு இன்டீரியர் டிசைனர் ஆவார். மேலும் இவர் ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

ஷாருக்கான் மனைவி மீது பரபர புகார்.. பதிவு செய்யப்பட்ட FIR.. - பாலிவுட்டில் அதிர்வலை.. காரணம் என்ன ?

இருப்பினும் தனது டிசைனிங்கில் தொழிலுக்கு முன்னுரிமை கொடுக்கும் இவர் பாலிவுட்டில் ஆலியா பாட் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வீட்டிற்கும் இவர்தான் இன்டீரியர் டிசைன் செய்து கொடுத்துள்ளார். அதோடு அவ்வப்போது வெளியிலும் சில பணிகளை செய்து வருகிறார்.

ஷாருக்கான் மனைவி மீது பரபர புகார்.. பதிவு செய்யப்பட்ட FIR.. - பாலிவுட்டில் அதிர்வலை.. காரணம் என்ன ?

இந்த நிலையில் இவர் மீது மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் நில மோசடி புகார் அளித்துள்ளார். மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கிரித் ஜஸ்வந்த் ஷா என்ற இந்த நபர், துல்சியானி கட்டுமான குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் அனில் துல்சியானி, மகேஷ் துல்சியானி மற்றும் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளார்.

ஷாருக்கான் மனைவி மீது பரபர புகார்.. பதிவு செய்யப்பட்ட FIR.. - பாலிவுட்டில் அதிர்வலை.. காரணம் என்ன ?

அதாவது 2015-ம் ஆண்டு, லக்னோ சுஷாந்த் கோல்ஃப் சிட்டியில் உள்ள துல்சியானி கோல்ஃப் வியூவில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை ரூ.86 லட்சம் கொடுத்து தான் வாங்கியதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு 2016-ம் ஆண்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டிய நிலையில், அந்த வீட்டை வேறொருவருக்கு கொடுத்ததுடன், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார் கொடுத்துள்ளார்.

ஷாருக்கான் மனைவி மீது பரபர புகார்.. பதிவு செய்யப்பட்ட FIR.. - பாலிவுட்டில் அதிர்வலை.. காரணம் என்ன ?

மேலும் இந்த கட்டுமான நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடரான ஷாருக்கானின் மனைவி கௌரி கான்தான் இருக்கிறார். லக்னோ அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தை விளம்பரத்தைப் பார்த்துதான், தான் அந்த பிளாட்டை வாங்கியதாகவும் புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து கிரித்தின் புகாரை பெற்ற காவல்துறையினர், கௌரி கான் மற்றும் துல்சியானி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தால் பாலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தியதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு, பல முயற்சிகளுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories