சினிமா

“சரியான நேரத்தில்.. உதவிக்கு நன்றி” -2 நாட்களுக்கு முன் ஏற்பட்ட மாரடைப்பு குறித்து சுஷ்மிதா சென் உருக்கம்

தனக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தற்போது நலமாக உள்ளதாகவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.

“சரியான நேரத்தில்.. உதவிக்கு நன்றி” -2 நாட்களுக்கு முன் ஏற்பட்ட மாரடைப்பு குறித்து சுஷ்மிதா சென் உருக்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆந்திராவை சொந்தமாக கொண்ட சுஷ்மிதா சென், 1994-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் (உலக அழகி) பட்டம் பெற்றார். இதையடுத்து இவர் இந்தியாவில் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து 1996-ம் ஆண்டு பாலிவுட்டில் 'தஸ்டக்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவரது இரண்டாவது படமே தமிழில் நடித்தார்.

“சரியான நேரத்தில்.. உதவிக்கு நன்றி” -2 நாட்களுக்கு முன் ஏற்பட்ட மாரடைப்பு குறித்து சுஷ்மிதா சென் உருக்கம்

1997-ல் நாகார்ஜுன் நடிப்பில் வெளியான 'ரட்சகன்' படத்தில் நடித்து பிரபலமான. இந்த படத்தில் இடம்பெற்ற "சோனியா சோனியா.. சொக்க வைக்கும் சோனியா.." என்ற பாடல் மூலம் இளைஞர்கள் மனதை கொள்ளைகொண்டார். இதையடுத்து தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வந்த இவர், 1999-ல் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான 'முதல்வன்' படத்தில் "ஷகலக பேபி.." பாடலில் நடித்தார்.

“சரியான நேரத்தில்.. உதவிக்கு நன்றி” -2 நாட்களுக்கு முன் ஏற்பட்ட மாரடைப்பு குறித்து சுஷ்மிதா சென் உருக்கம்

அதன்பிறகு தமிழ் படங்கள் எதுவும் நடிக்காத இவர் தொடர்ந்து பாலிவுட்டில் மட்டுமே நடித்து வந்தார். இந்த நிலையில் இவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2 குழந்தைகளை தத்தெடுத்தார். தொடர்ந்து அவர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் இவர் நடிப்பில் இருந்து சில காலம் விலகினார்.

இவர் இறுதியாக 2015-ல் வெளியான 'நிர்பக்' என்ற பெங்காலி படத்தில் நடித்தார். அதன்பிறகு திரைப்படங்களில் நடிக்காத இவர், 2020 முதல் தற்போது வரை ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் 'ஆர்யா' என்ற இந்தி சீரிஸில் நடித்து வருகிறார்.

“சரியான நேரத்தில்.. உதவிக்கு நன்றி” -2 நாட்களுக்கு முன் ஏற்பட்ட மாரடைப்பு குறித்து சுஷ்மிதா சென் உருக்கம்

இந்த நிலையில் தனக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தற்போது நலமாக உள்ளதாகவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “'உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும் தைரியமாகவும் வைத்திருங்கள், உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது அது உங்களுடன் நிற்கும் ஷோனா' என்று என் தந்தை அடிக்கடி கூறுவார். இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்ட் சிகிச்சை செய்யப்பட்டது.

இதையடுத்து இதயநோய் நிபுணர்கள் எனக்கு பெரிய இதயம் இருப்பதாக (வேடிக்கையாக) மீண்டும் உறுதி படுத்தினார். சரியான நேரத்தில் நீங்கள் அளித்த உதவிக்கும், ஆக்கப்பூர்வமான உங்களின் செயலுக்கும் மிக்க நன்றி. இப்போது நான் நலமுடன் இருக்கிறேன். மேலும், மீண்டும் வாழ்க்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சரியான நேரத்தில்.. உதவிக்கு நன்றி” -2 நாட்களுக்கு முன் ஏற்பட்ட மாரடைப்பு குறித்து சுஷ்மிதா சென் உருக்கம்

இவரது இந்த பதிவை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலிவுட்டின் திரை நட்சத்திரங்கள் உட்பட பலரும் அவரை நலம் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து இவருக்கு பூரண குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் பாலிவுட்டில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories