சினிமா

லோகேஷ்.. திரிஷா.. பிரியா ஆனந்த்.. - T67 படப்பிடிப்புக்கு காஷ்மீர் சென்ற திரைப்பட குழு.. பட்டியல் இதோ !

விஜயின் 67-வது படத்திற்காக காஷ்மீரில் விமானத்தில் செல்லக்கூடிய படக்குழுவினர் பட்டியல் வெளியாகியுள்ளது.

லோகேஷ்.. திரிஷா.. பிரியா ஆனந்த்.. - T67 படப்பிடிப்புக்கு காஷ்மீர் சென்ற திரைப்பட குழு.. பட்டியல் இதோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2017-ல் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்தான் 'மாநகரம்'. இந்த படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் லோகேஷ் கனகராஜ். இந்த படம் வெளியாகி திரை ரசிகர்களுக்கிடேயே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இது லோகேஷிற்கு ஒரு நல்ல பெயரையும் கொடுத்தது.

அதன்பிறகு இவரது இயக்கத்தில் 2019-ல் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படம் பெரும் பெயரை இவருக்கு பெற்று தந்தது. மாபெரும் ஹிட் கொடுத்த இந்த படத்தை அடுத்து, இவரது அடுத்த படமே விஜயுடன் ஒப்பந்தமானது. அதன்படி 2021-ல் மாஸ்டர் படம் வெளியானது. இது லோகேஷிற்கு மட்டுமின்றி ஒரு வில்லனாக விஜய் சேதுபதிக்கும் பெரிய பெயரை பெற்று தந்தது.

லோகேஷ்.. திரிஷா.. பிரியா ஆனந்த்.. - T67 படப்பிடிப்புக்கு காஷ்மீர் சென்ற திரைப்பட குழு.. பட்டியல் இதோ !

தொடர்ந்து இந்த படத்தில் அனிருத் இசையில் ஒலித்த மாஸ்டர் மியூசிக் உலகளவில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமலுடன் ஒப்பந்தமானார். கடந்த ஆண்டு (2022) வெளியான தமிழ் படங்களில் சிறந்த படமாக திகழ்ந்த விக்ரம் இவரை தற்போது புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு கமலுக்கு ஒரு ஹிட் கொடுத்த படம் என்றால் அது 'விக்ரம்' தான். மேலும் இந்த படத்தை பார்க்கும் முன்பு 'கைதி' படத்தை பார்க்க வேண்டும் என்று லோகேஷ் சொன்னது ஆரம்பத்தில் அதிகமானோருக்கு புரியவில்லை என்றாலும், படத்தை பார்த்த பிறகு இரண்டு படங்களுக்கும் உள்ள கனெக்ஷன் தெரியவந்தது.

லோகேஷ்.. திரிஷா.. பிரியா ஆனந்த்.. - T67 படப்பிடிப்புக்கு காஷ்மீர் சென்ற திரைப்பட குழு.. பட்டியல் இதோ !

இதையடுத்தே ஹாலிவுட்டில் மார்வெல் யுனிவர்ஸ் (MCU) என்று சொல்வது போல் கோலிவுட்டில் லோகி யுனிவர்ஸ் (LCU) என்று ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. விக்ரமை தொடர்ந்து விஜயை வைத்து அவரது 67-வது படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியானது. அதன்படி தற்போது வாரிசு வெளியீட்டை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

அதோடு இந்த படத்தின் ப்ரோமோ ஷூட் அண்மையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஒவ்வொரு அப்டேட்கள் வெளியாகி வருகிறது. இந்த படமும் விக்ரம் படத்துடன் தொடர்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ்.. திரிஷா.. பிரியா ஆனந்த்.. - T67 படப்பிடிப்புக்கு காஷ்மீர் சென்ற திரைப்பட குழு.. பட்டியல் இதோ !

இந்த நிலையில் நேற்று மாலை விஜயின் 47 படத்தின் அப்டேட் வெளியானது. Seven Screen Studio தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதிகாரபூர்வ அப்டேட்டில் "விஜயின் 67-வது படத்தை கைதி, மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். S S லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.

லோகேஷ்.. திரிஷா.. பிரியா ஆனந்த்.. - T67 படப்பிடிப்புக்கு காஷ்மீர் சென்ற திரைப்பட குழு.. பட்டியல் இதோ !

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார். எடிட்டிங் பிலோமின் ராஜ், இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ், ரத்தின குமார், தீரஜ் வைத்தி ஆகியோர் வசனம் எழுதவுள்ளனர். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், குழுக்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த படத்தை Seven Screen Studio நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

லோகேஷ்.. திரிஷா.. பிரியா ஆனந்த்.. - T67 படப்பிடிப்புக்கு காஷ்மீர் சென்ற திரைப்பட குழு.. பட்டியல் இதோ !

இந்த நிலையில் தற்போது இந்த படக்குழு தங்கள் முதற்கட்ட படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்லவுள்ளனர். அதன்படி இன்று விமானத்தில் செல்லவிருக்கும் படக்குழுவினரின் பட்டியல் மற்றும் அவர்களது இருக்கை எண்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் த்ரிஷா, பிரியா ஆனந்த், தயாரிப்பாளர் S S லலித் குமார், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது.

லோகேஷ்.. திரிஷா.. பிரியா ஆனந்த்.. - T67 படப்பிடிப்புக்கு காஷ்மீர் சென்ற திரைப்பட குழு.. பட்டியல் இதோ !
லோகேஷ்.. திரிஷா.. பிரியா ஆனந்த்.. - T67 படப்பிடிப்புக்கு காஷ்மீர் சென்ற திரைப்பட குழு.. பட்டியல் இதோ !

அதன்படி இவர்கள் செல்லக்கூடிய விமானம் இன்று காலை 8.30-க்கு புறப்பட்டு காஷ்மீர் ஸ்ரீ நகருக்கு 12.05-க்கு சென்றுள்ளது. தற்போது இவர்கள் அனைவரும் ஸ்ரீ நகர் ஏர்போர்ட்டில் இருப்பது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் நடிகர் விஜயும் இருக்கிறார். இது தொடர்பான செய்திகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதன் மூலம் விஜய் காஷ்மீருக்கு முன்பே சென்றிருக்கலாம் அல்லது தனி விமானத்தில் கோடா சென்றிருக்கலாம் என தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories