சினிமா

மீண்டும் முழு நீள காமெடி.. தன்னை நிலை நிறுத்தியிருக்கிறாரா சிவகார்த்திகேயன்?- Prince :எப்படி இருக்கிறது?

ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் வரிசையில் இந்த தீபாவளிக்கு சிரிப்பு வெடியாக வந்திருக்கிறது ப்ரின்ஸ். படம் எப்படி இருக்கிறது ? பார்க்கலாம்..

மீண்டும் முழு நீள காமெடி..  தன்னை நிலை நிறுத்தியிருக்கிறாரா சிவகார்த்திகேயன்?- Prince :எப்படி இருக்கிறது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒரு ஹீரோவை சூப்பர் ஸ்டார் இடத்துக்கு உயர்த்துவதில் ஆக்‌ஷன் படங்களுக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு முழுநீள காமெடிப் படங்களுக்கும் இருக்கிறது. ரஜினிக்கு தில்லுமுள்ளு, குருசிஷ்யன், கமலுக்கு மைக்கேல் மதன காமராஜா, பஞ்ச தந்திரம் என அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படி, சீரியஸான படங்களுக்கு நடுவே காமெடி பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் வரிசையில் இந்த தீபாவளிக்கு சிரிப்பு வெடியாக வந்திருக்கிறது ப்ரின்ஸ். படம் எப்படி இருக்கிறது ? பார்க்கலாம்..

மீண்டும் முழு நீள காமெடி..  தன்னை நிலை நிறுத்தியிருக்கிறாரா சிவகார்த்திகேயன்?- Prince :எப்படி இருக்கிறது?

கதை இதுதான்... ஜாலியான பள்ளி ஆசிரியர் சிவகார்த்திகேயன். சுதந்திரப்போராட்டத்தில் பங்கு பெற்ற முன்னோர்களைக் கொண்ட குடும்பமென்பதால் சிவகார்த்திகேயனின் தந்தைக்கு பிரிட்டிஷ்காரர்களென்றால் பிடிக்காது. அதே ஊரில் பிரஞ்சு காலணியில் இருக்கும் பிரிட்டிஷ் பெண்ணாக மரியாவை பார்த்ததும் காதலில் விழுகிறார் சிவகார்த்திகேயன்.

இங்கிருக்கும் நிலத்தை விற்றுவிட்டு பிரிட்டன் சென்றுவிட வேண்டுமென்று என்ற திட்டத்துடன் இருப்பார், இந்தியர்களென்றாலே வெறுப்புடன் பார்க்கும் மரியாவின் தந்தை. இந்த பிரிட்டிஷ்காரரின் நிலத்தை திருட நினைக்கும் வில்லன் பிரேம்ஜி. இத்தனைக்கும் நடுவே ஒரு பூ, பூக்கத்தானே செய்கிறது என்பது போல, பிரிட்டிஷ் பெண் மரியாவை காதலித்து வென்றாரா தமிழ் பையன் சிவகார்த்திகேயன் என்பதே கதை.

மீண்டும் முழு நீள காமெடி..  தன்னை நிலை நிறுத்தியிருக்கிறாரா சிவகார்த்திகேயன்?- Prince :எப்படி இருக்கிறது?

வழக்கம்போலவே ஹியூமரில் வெளுத்து வாங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த இடத்திலும் குறையாத எனர்ஜி, டைமிங் காமெடிகள், நடனம், அளவான ஆக்‌ஷன் என பக்காவான ஹீரோவாக பொருந்துகிறார்.

நாயகியாக உக்ரைன் நடிகை மரியா. ஆங்கில ஆசிரியராக அழகாய் வருகிறார். நிறைய இடங்களில் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் தந்தையாக சத்யராஜ். இவரும், காமெடியில் அசத்துகிறார்.

முழுக்க முழுக்க காமெடிக்கென ஒரு படமென்பதெல்லாம் ஓகே. அதற்கென, அதர பழசான வாட்ஸ் அப் காமெடிகள், நான் ஸ்டாப் பேச்சு என நிறைய இடங்களில் காமெடி ஓவர் டோஸ் ஆகிறது. இதனால், காமெடியைப் பார்க்கும் ரசிகர்கள் முகம் சீரியஸாகிறது.

மீண்டும் முழு நீள காமெடி..  தன்னை நிலை நிறுத்தியிருக்கிறாரா சிவகார்த்திகேயன்?- Prince :எப்படி இருக்கிறது?

வில்லனாக பிரேம்ஜியும், சிறப்புத் தோற்றத்தில் சூரியும் என இருவருமே தனக்கான கதாபாத்திரத்தை கச்சிதமாக கொடுத்திருக்கிறார்கள். படத்தில் நிறைய காமெடிகள் ஒர்க் அவுட் ஆகிறது. ஆனால், பெரும்பாலான காட்சிகள் ரசிகர்களை சோதிக்கிறது. படத்துக்குள் ஒரு கனெக்டிவிட்டி இல்லாமல் எங்கோ தொடங்கி எப்படியோ சென்று முடிகிறது. குறிப்பாக, ஹியூமனிட்டி, நேஷனாலிட்டி என இரண்டை வைத்துக் கொண்டு க்ளைமேக்ஸ் அரை மணிநேரத்தை ஒப்பேத்திவிட்டிருக்கிறார்கள்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இரண்டுமே ஒரு ஊருக்குள் நடக்கும் கதைதான். அதில், லாஜிக்காக எந்த சிக்கலும் இருக்காது. இதுவும், கடலூரின் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. ஆனால், லாஜிக்காக எக்கச்சக்க ஓட்டைகள்.

தமனின் இசையில் படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களுமே சூப்பர். பாடல்களின் காட்சியமைப்பாகவும் ஃபெஸ்டிவல் மோட் தருகிறது. அட்டகாசமான நடனத்துடன் கவர்கிறார் சிவகார்த்திகேயன். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, பிரவீன் கேஎஸ் படத்தொகுப்பு என அனைத்துமே படத்துக்கு ஏற்ற ஒர்க்.

மீண்டும் முழு நீள காமெடி..  தன்னை நிலை நிறுத்தியிருக்கிறாரா சிவகார்த்திகேயன்?- Prince :எப்படி இருக்கிறது?

சிவகார்த்திகேயனுக்கு டான், டாக்டர் என இரண்டு படங்களும் பெரிய ஹிட். அதுபோல, தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கிய பிட்ட கோடா மற்றும் ஜதி ரத்னாலு என இரண்டுமே பெரிய ஹிட் என்பதால் சிவகார்த்திகேயன் - அனுதீப் கூட்டணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் ஒட்டுமொத்த கதையாக நிறைய காமெடிகளை ஒர்க் அவுட் செய்திருக்கிறார் அனுதீப். இருப்பினும், தமிழ் ரசிகர்களின் பல்ஸை மிஸ் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

காமெடிக்கு நடுவே போர் தரும் கொடூர அனுபவங்களை சொன்ன இடத்திலும், மனித நேயத்தின் முக்கியத்துவத்தை சொன்னதிலும், தேசபத்தியை கேடயமாகக் கொண்டு சுற்றித் திரியும் ட்ராமா க்ரூப்களை காமெடியாக உடைத்தெறிந்த இடத்திலும் இயக்குநருக்கும், படக்குழுவுக்கும் பாராட்டுகள். ஆனால், இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் ப்ரின்ஸ் ரசிகர்களின் மனதை வென்றிருக்கும்.

மொத்தத்தில், ஒரு சில சோதனைகளை பொருத்துக் கொள்ளும் மனபக்குவத்துடன், செம ஜாலியான காமெடி ரைடுக்கு செல்ல விரும்புபவர்கள் தைரியமாக இந்த பெஸ்டிவலை ப்ரின்ஸ் உடன் கொண்டாடலாம்.

banner

Related Stories

Related Stories