சினிமா

youtube பெண் தொகுப்பாளரை ஆபாசமாகப் பேசிய வழக்கு.. பிரபல மலையாள நடிகர் கைது!

பெண் தொகுப்பாளரை ஆபாசமாகப் பேசிய வழக்கில் மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியை போலிஸார் கைது செய்துள்ளனர்.

youtube பெண் தொகுப்பாளரை ஆபாசமாகப் பேசிய வழக்கு.. பிரபல மலையாள நடிகர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மலையாள சினிமாவில் இளம் நடிகர்களின் அதிகம் கவனிக்கப்படுபவராக வளர்ந்து வருகிறார் ஸ்ரீநாத் பாசி. இவர் '22 பீமேல் கோட்டயம்', 'உஸ்தாத் ஓட்டல்', 'கும்பளிங்கி நைட்ஸ்', 'வைரஸ்', உள்ளிட்ட பல நடங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீநாத் பாசி நடிப்பில் கடந்த வெள்ளியன்று 'சட்டம்பி' என்ற புதிய படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து பிரபல youtube சேனல் ஒன்று படம் குறித்து இவருடன் பேட்டி எடுத்துள்ளது.

youtube பெண் தொகுப்பாளரை ஆபாசமாகப் பேசிய வழக்கு.. பிரபல மலையாள நடிகர் கைது!

அப்போது தொகுப்பாளர் கேட்ட கேள்வியால் நடிகர் ஸ்ரீநாத் பாசி கோபமடைந்துள்ளார். மேலும் பேட்டியைப் பாதியில் நிறுத்தி பெண் தொகுப்பாளரை ஆபாசமாகத் திட்டி அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.

youtube பெண் தொகுப்பாளரை ஆபாசமாகப் பேசிய வழக்கு.. பிரபல மலையாள நடிகர் கைது!

இதையடுத்து, நடிகர் ஸ்ரீநாத் பாசி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீநாத் பாசியைக் கைது செய்துள்ளது. இவர் கைது செய்யப்பட்டுள்ளது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories