சினிமா

‘கையில் பாதி.. வாயில் பாதி..’ பரோட்டாவுடன் கிடந்த சடலம் : விஜய் அலுவலகத்தில் நடந்த பரபரப்பு!

விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தில், ஒரு ஆண் சடலம் கண்டெடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கையில் பாதி.. வாயில் பாதி..’ பரோட்டாவுடன் கிடந்த சடலம் : விஜய் அலுவலகத்தில் நடந்த பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னணி நடிகர் விஜய், தற்போது அரசியலிலும் அவ்வப்போது தலையை காட்டி வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்று அசத்தினர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில், சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு வேலை செய்து வந்த பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பெயிண்டரான பிரபாகரன் (34) என்பவர், அவரது அலுவலகத்திலேயே தங்கி வேலை செய்து வந்தார்.

‘கையில் பாதி.. வாயில் பாதி..’ பரோட்டாவுடன் கிடந்த சடலம் : விஜய் அலுவலகத்தில் நடந்த பரபரப்பு!

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று சம்பளத்தை பெற்றுக்கொண்டு தன்னுடைய குடும்பத்தினரை காண பழைய வண்ணாரப்பேட்டைக்குச் சென்ற பிரபாகரன், நேற்று இரவு குடிபோதையில் விஜய்யின் அலுவலகத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

அப்படி வந்தவர், உடனிருந்த மேஸ்திரி ஒருவரிடம் தனக்கு ரொம்ப பசி இருப்பதாகவும், தனது கையில் பணம் இல்லாததால், பரோட்டா வாங்க ரூ.100 தருமாறும் கேட்டுள்ளார். அவரும் கொடுத்துள்ளார். இதனையடுத்து அடுத்த நாள் காலையில் அலுவலகத்தை திறக்க மற்ற ஊழியர்கள் முற்பட்டபோது, அலுவலகம் உள்ளே பூட்டப்பட்டிருந்தது.

பின்னர் கதவை உடைத்து பார்த்தபோது, பிரபாகரன் கையில் பாதி பரோட்டா, வாயில் பாதி பரோட்டாவுடன் தரையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சடலத்தை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

‘கையில் பாதி.. வாயில் பாதி..’ பரோட்டாவுடன் கிடந்த சடலம் : விஜய் அலுவலகத்தில் நடந்த பரபரப்பு!

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், குடிபோதையில் பரோட்டா சாப்பிட்டதில் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும், எதுவானாலும் பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகே முழு விவரம் தெரியவரும் என்றனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த செய்தி ரசிகர்களுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories