சினிமா

“என்னைய கொன்னு தான் காசு சம்பாதிக்கணுமா?” - ரஜினி பட நடிகை பெரியாத்தா ஆவேசம் !

தான் இறந்துவிட்டதாக பரவிய தகவல்களை நம்பி, பலரும் இரங்கல் தெரிவித்ததால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார் நடிகை குலப்புள்ளி லீலா

“என்னைய கொன்னு தான் காசு சம்பாதிக்கணுமா?” - ரஜினி பட நடிகை பெரியாத்தா ஆவேசம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரபல மலையாள நடிகையான குலப்புள்ளி லீலா நாச்சியார், சினிமாவில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'முத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது தமிழில் அண்மையில் வெளியான மாஸ்டர், அரண்மனை 3, கொம்பு வச்ச சிங்கமடா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 'அண்ணாத்த' படத்தில் 'பெரியாத்தா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபாலகியுள்ளார்.

“என்னைய கொன்னு தான் காசு சம்பாதிக்கணுமா?” - ரஜினி பட நடிகை பெரியாத்தா ஆவேசம் !

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, இவர் திடீரென இறந்துவிட்டதாக மலையாள யூட்யூப் சேனல் ஒன்று தவறாக செய்தி வெளியிட்டது. இந்த தகவலால் இவரது ரசிகர்கள், சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள் என பலரும் தங்கள் இரங்கலை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர். மேலும் தெரிந்தவர்கள் பலரும் இவரை தொடர்புகொண்டு விசாரித்தனர்.

“என்னைய கொன்னு தான் காசு சம்பாதிக்கணுமா?” - ரஜினி பட நடிகை பெரியாத்தா ஆவேசம் !

இதனால் மிகவும் கடுப்பான லீலா, தன்னை பற்றி பரவிய பொய்யான செய்திக்கு மிகவும் வேதனை தெரிவித்துள்ளார். "வெறும் Share, Likes பெறுவதற்காக இப்படி பொய்யான செய்திகளை போட்டு, அதன் மூலம் வரும் காசு பெறுவதற்கு எப்படி தான் மனம் வருகிறதோ?.. அதிலும் உயிரோடு இருக்கும் ஒருவரை இறந்துவிட்டதாக கூறிதான் சம்பாதிக்க வேண்டுமா" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் இது குறித்து பலரும் தன்னை புகார்செய்யும்படி தெரிவித்ததாகவும், ஆனால் தான் அதை செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

banner

Related Stories

Related Stories