உலகம்

பிரதமரை கொல்ல ஒத்திகை .. தாயை சுட்டு கொன்ற இளம் நடிகர்.. உலகை அதிரவைக்கும் வாக்குமூலம்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவவை கொல்ல, தாயின் தலையில் சுட்டு ஒத்திகை பார்த்ததாக பிரபல நடிகர் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரை கொல்ல  ஒத்திகை .. தாயை சுட்டு கொன்ற  இளம் நடிகர்.. உலகை அதிரவைக்கும் வாக்குமூலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த 2017 ஆம் ஆண்டு Netflix-ல் வெளியான Riverdale என்ற வெப் தொடரில் நடித்தவர் ரியான் கிராந்தம். 24 வயதான இவர், ஒரு சில தொலைக்காட்சிகளிலும் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது சொந்த தாயான பார்பாரா வைட்டை கொலை செய்த குற்றத்திற்காக நடிகர் ரியான் கிராந்தாம் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, தனது தாயை ஏன் கொலை செய்தேன்? எவ்வாறு கொலை செய்தேன்? என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார் ரியான்.

பிரதமரை கொல்ல  ஒத்திகை .. தாயை சுட்டு கொன்ற  இளம் நடிகர்.. உலகை அதிரவைக்கும் வாக்குமூலம்!

அதாவது ஸ்குவாமிஷில் உள்ள தனது வீட்டில், தாய் பியானோ வாசித்து கொண்டிருந்தபோது, அவரின் பின்னால் நின்று சுட்டு கொன்றதாக அவர் தெரிவித்தார். மேலும் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கொலை செய்யும் நோக்கில் இருந்ததாகவும், தாயை கொன்ற அடுத்த நாளே, 3 துப்பாக்கிகள், குண்டுகள், 12 கையெறி ஆயுதங்கள், தேவையான பொருள்கள் எடுத்து, ஜஸ்டின் ட்ரூடோவின் வீட்டிற்கு செல்ல வழிகாட்டும் வகையில் மேப் என தனது கார் முழுவதும் பொருள்களை நிரப்பி செல்ல தயாரானதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமரை கொல்ல  ஒத்திகை .. தாயை சுட்டு கொன்ற  இளம் நடிகர்.. உலகை அதிரவைக்கும் வாக்குமூலம்!

அதுமட்டுமின்றி, தான் ஏன் ஜஸ்டின் ட்ரூடோவை கொல்ல துடிக்கிறேன் என்பதை தனது டைரியில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இவரின் இந்த வாக்குமூலம் அந்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 200 கிமீ தொலைவுக்கு காரை ஒட்டி சென்ற அவர், தான் படித்த பல்கலைக்கழகத்தில் காரை நிறுத்தி கொலை செய்ய வேண்டுமா வேண்டாமா என யோசித்துள்ளார். பின்னர், மனம்மாறிய அவர், வான்கூவர் காவல் நிலையத்திற்கு சென்று தனது தாயை கொலை செய்ததாக சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories