சினிமா

தனுஷின் Wunderbar Films யூட்யூப் சேனல் முடக்கம்.. ரசிகர்கள் ஷாக்: காரணம் என்ன? #5IN1_CINEMAS

தனுஷின் `வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' யூட்யூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.

தனுஷின் Wunderbar Films யூட்யூப் சேனல் முடக்கம்.. ரசிகர்கள் ஷாக்: காரணம் என்ன? #5IN1_CINEMAS
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனுஷின் `வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' யூட்யூப் சேனல் முடக்கம்!

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தொடர்ச்சியாக பல மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இவரது சொந்த தயாரிப்பு நிறுவனம் `வுண்டர்பார் ஃபிலிம்ஸ்'. இந்த நிறுவனத்தின் மூலம் 3, எதிர்நீச்சல், பவர் பாண்டி உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். கூடவே இந்த நிறுவனத்தின் யூட்யூப் சேனலில், அவர்கள் தயாரிக்கும் படத்தின் பாடல்கள் டிரெய்லர் போன்றவை வெளியிடப்பட்டு வந்தது. இந்த நிலையில் `வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' யூட்யூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனை அந்த நிறுவனமே முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. எனவே அவர்களது தயாரிப்பில் உருவான பல பட வீடியோக்களும், அதிக வீயூவ்ஸ் பெற்ற ரௌடி பேபி உள்ளிட்ட பல பாடல்களும் முடங்கியுள்ளது. தற்போது அந்த சேனலை மீட்கும் வேலையில் பரபரப்பாக இயங்கி வருகிறது தனுஷ் தரப்பு.

`F3' படத்தின் புதிய பாடல் வெளியானது!

அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா, மெஹ்ரின் நடித்துள்ள படம் F3. இது 2019ல் இதே கூட்டணியில் உருவாகி வெளியான F2 படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்திலிருந்து ஏற்கெனவே இரண்டு பாடல்களும், ஒரு டிரெய்லரும் வெளியானது. தற்போது இப்படத்திலிருந்து `லைஃப் அன்டே' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலில் நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு தோற்றத்தில் வந்து நடனமாடியுள்ளார். இதற்கு முன் ராம் சரணின் `ரங்கஸ்தலம்' படத்தில் பூஜா ஹெக்டே நடனமாடிய `ஜிகேலு ராணி' பாடல் பெரிய ஹிட்டானது. அதைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே இந்தப் பாடலில் நடனமாடியுள்ளார்.

வெளியானது `ஹ்ரிதயம்' பட வீடியோ பாடல்!

வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ப்ரணவ் மோகன்லால், கல்யாணி ப்ரியதர்ஷன், தர்ஷனா நடித்து வெளியான மலையாளப்படம் `ஹ்ரிதயம்'. இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இதற்கு கிடைத்த வரவேற்பால் தற்போது இந்தப் படம் இந்தியிலும் விரைவில் ரீமேக் ஆக இருக்கிறது. ஹேஷம் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது. அதில் ஒரு பாடலான `ஒனக்க முந்திரி' பாடலின் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு.

ஓடிடியில் வெளியாகும் ஷாஹித் கபூரின் `ஜெர்ஸி'!

நானி நடிப்பில் கௌதம் தின்னணுரி இயக்கி வெளியான படம் `ஜெர்ஸி'. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த ரீமேக்கையும் கௌதம் தின்னணுரியே இயக்கினார். ஷாஹித் கபூர், மிருணாள் தாக்கூர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்தனர். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவே ஏப்ரல் 22ம் தேதி படம் வெளியானது. தற்போது தியேடருக்கு பிறகான வெளியீடாக ஓடிடியில் வெளியாக உள்ளது படம். அதன்படி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 20ம் தேதி வெளியாக உள்ளது `ஜெர்ஸி'.

பிக்ஸாரின் `லைட்இயர்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஹாலிவுட் அனிமேஷன் படங்களில் பிரபலமான ஒன்று `டாய் ஸ்டோரி'. இந்தக் கதையில் வரும் `பஸ் லைட்இயர்' என்ற கதாபாத்திரத்திற்கு என தனி படத்தை உருவாகியுள்ளது பிக்ஸார் நிறுவனம். `லைட்இயர்' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அங்குஸ் மெக்லேன் இயக்கியுள்ளார். தற்போது இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி படம் ஜூன் 17ம் தேதி வெளியாக உள்ளது.

banner

Related Stories

Related Stories