சினிமா

எல்லோரும் சமம்னா யார்தான் ராஜா?: உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி ட்ரைலர் வெளியானது - கவனத்தை ஈர்க்கும் வசனம்!

போனி கபூர் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் ட்ரைலர் வெளியானது!

எல்லோரும் சமம்னா யார்தான் ராஜா?: உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி ட்ரைலர் வெளியானது - கவனத்தை ஈர்க்கும் வசனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ஆர்ட்டிகிள் 15’. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையையும், உயர் சாதியினரால் பாதிக்கப்படுவதையும் விவரித்திருக்கும் இந்த படம்.

இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக போனி கபூரின் பேவியூ நிறுவனம் தயாரிக்கிறது. அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆயுஷ்மான் குரானா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தியில் இயக்கிய அனுபவ் சின்ஹாவே தமிழ் பதிப்பின் கதையை தீட்டியிருக்கிறார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக தன்யா ரவிசந்திரன் நடிக்க நடிகர் ஆரி அர்ஜுனன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட இந்த படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தை பார்த்த சென்சார் குழு படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கி ரிலீஸுக்கு அனுமதி அளித்துள்ளது. வரும் 20ஆம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ''எல்லோரும் சமம்னா யார்தான் ராஜா?" என்ற கேள்வியுடன் இந்த ட்ரெய்லர் தொடங்குகிறது. படத்தில் ட்ரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே பெரும் பாராட்டுகளை ட்ரைலர் குவிக்கத்தொடங்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories