சினிமா

”அண்ணல் சொன்னதே நம் சாசனம்” : கவனத்தை ஈர்க்கும் உதயநிதியின் ’நெஞ்சுக்கு நீதி’ பட போஸ்டர்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் ஆர்ட்டிகிள் 15 பட தமிழ் ரீமேக்கின் தலைப்பு வெளியானது.

”அண்ணல் சொன்னதே நம் சாசனம்” : கவனத்தை ஈர்க்கும் உதயநிதியின் ’நெஞ்சுக்கு நீதி’ பட போஸ்டர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ஆர்ட்டிகிள் 15’.

சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையையும், உயர் சாதியினரால் பாதிக்கப்படுவதையும் விவரித்திருக்கும் இந்த படம்.

இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக போனி கபூரின் பேவியூ நிறுவனம் தயாரிக்கிறது. அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆயுஷ்மான் குரானா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தியில் இயக்கிய அனுபவ் சின்ஹாவே தமிழ் பதிப்பின் கதையை தீட்டியிருக்கிறார்.

இந்நிலையில் படத்தின் தலைப்பை வெளியிடும் விதமாக போஸ்டரும், வீடியோ வடிவிலான மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற இணைச் சொற்றொடரோடு படத்திற்கு நெஞ்சுக்கு நீதி தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் சாதி..சாதி..சாதி.. என இடம்பெற்றிருக்கும் பாடல் தற்போது அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறது.

திபு நைனன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்தில் ஆரி, தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மோஷன் போஸ்டரே பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories