சினிமா

டொவினோ தாமஸ் நடிப்பில் திகில் படமாக உருவாகும் `நீலவெளிச்சம்'! #CINEMAUPDATES

`ஹெர்' படத்தில் ஊர்வசி, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா நம்பீசன், லிஜோமோல் ஜோஷ், குரு சோமசுந்தரம், பிரதாப் போத்தன் என பலரும் நடிக்கிறார்கள்.

டொவினோ தாமஸ் நடிப்பில் திகில் படமாக உருவாகும்  `நீலவெளிச்சம்'! #CINEMAUPDATES
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆஷிக் அபு இயக்கும் `நீலவெளிச்சம்'!

மலையாள சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ஆஷிக் அபு. இவர் அடுத்ததாக `நீலவெளிச்சம்' என்ற படத்தை இயக்குகிறார். இது எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் எழுதிய ஒரு சிறுகதையை மையமாக வைத்து உருவாகிறது. இதில் டொவினோ தாமஸ், ரீமா கலீங்கல், ரோஷன் மேத்திவ், ஷைன் தாமஸ் சாக்கோ முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதனுடைய படப்பிடிப்பு துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இது ஒரு ஹாரர் படமாக உருவாகிறது என சொல்லப்படுகிறது.

ராவீவ் ரவியின் புதிய படம்!

மலையாளத்தில் `அன்னாயும் ரசூலும்', `கம்மாட்டிபாடம்' போன்ற சிறந்த படங்களை எடுத்தவர் ராஜீவ் ரவி. இவர் இயக்கத்தில் நிவின் பாலி நடிச்ச `துறமுகம்' ரிலீஸூக்குத் தயாராக இருந்தாலும், வெளியிடுவதில் தாமதம் ஆகி வருகிறது. இந்த தாமதத்திற்கு நடுவே இன்னொரு படத்தை எடுத்து முடித்துவிட்டார் ராஜீவ். `குட்டவும் சாக்ஷியும்' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் ஆசிஃப் அலி, சன்னி வெய்ன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2015ல் காசர்கோடு பகுதியில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியிருக்கிறது இந்தப் படம். மே 27ம் தேதி படத்தை வெளியிட உள்ளனர்.

ஊர்வசி, பார்வதி நடிக்கும் `ஹெர்'!

`ஃப்ரைடே', `லா பாயின்ட்' போன்ற மலையாளப்படங்களை இயக்கியவர் லிஜின் ஜோஷ். இவர் அடுத்ததாக `ஹெர்' என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ஊர்வசி, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா நம்பீசன், லிஜோமோல் ஜோஷ், குரு சோமசுந்தரம், பிரதாப் போத்தன் எனப் பலரும் நடிக்கிறார்கள். தற்போது இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு அர்சனா வாசுதேவ் கதை எழுதியுள்ளார்.

வெளியானது Bhool Bhulaiyaa 2 படத்தின் பாடல்!

1993ல பாசில் இயக்கத்தில் வெளியான மலையாளப்படம் மணிசித்ரதாழு'. இது தான் தமிழில் `சந்திரமுகி' என ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் Bhool Bhulaiyaa' என்ற பெயரில் ப்ரியதர்ஷன் இயக்கியிருந்தார். Akshay Kumar ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படம் 2007ல் வெளியானது. தற்போது இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. அனீஸ் பஸ்மி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கார்த்திக் ஆர்யன், க்யாரா அத்வானி, தபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர் வெளியான நிலையில் தற்போது ஒரு பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும் படம் மே 20ம் தேதி வெளியாக உள்ளது.

மே 20ல் `பஞ்சாயத் 2' - வெளியானது அறிவிப்பு!

தீபக் குமார் இயக்கத்தில் 2020ல வெளியான இந்தி வெப் சீரிஸ் `பஞ்சாயத்'. இது அமேசான் ப்ரைமில் வெளியானது. அருமையான காமெடி சீரிஸான இது பலரது பாராட்டுகளையும் பெற்றது. ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலராக வரும் இளைஞனை, அந்த கிராம மக்கள் ஏற்றுக் கொண்டார்களா என்பதை மையப்படுத்திய கதையாக இருந்தது. தற்போது இந்த சீரிஸின் இரண்டாவது சீசன் வெளியாக இருக்கிறது. மே 20ம் தேதி அமேஸான் ப்ரைமில் வெளியாக உள்ளது `பஞ்சாயத் 2'

banner

Related Stories

Related Stories