சினிமா

தீபாவளி ரிலீஸ்க்கு தயாராகும் தல, தளபதி படங்கள்.. முழு பட்டியல் இதோ! #5IN1_CINEMA

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாக உள்ள `ஐங்கரன்' பட புது டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தீபாவளி ரிலீஸ்க்கு தயாராகும் தல, தளபதி படங்கள்.. முழு பட்டியல் இதோ! #5IN1_CINEMA
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தீபாவளி ரேஸில் இத்தனை படங்களா?

தீபாவளி பண்டிகையின் பொழுது பெரிய நடிகர்களின் படம் வெளியாவது வழக்கமான ஒன்று. ஏற்கெனவே அஜித் - ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதே நாளில் விஜயின் 66வது படத்தை வெளியிடும் பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இந்த இரண்டு படங்கள் இல்லாமல், சிவகார்த்திகேயனின் `அயலான்', கார்த்தி நடித்துள்ள `சர்தார்' படமும் தீபாவளிக்கு வெளியிடலாம் என்ற யோசனையில் இருக்கிறார்கள். திட்டமிட்டபடி எந்தப் படம் தீபாவளிக்கு வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

`வெந்து தணிந்தது காடு' பட ரிலீஸ் தேதி?

மாநாடு படத்திற்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் படம் `வெந்து தணிந்தது காடு'. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து சிம்பு - கௌதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இதில் நாயகியாக சித்தி இதானி நடிக்கிறார். மேலும் ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறது படக்குழு. சீக்கிரம் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷின் `ஐங்கரன்' பட புது டிரெய்லர்!

ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார் நடித்திருக்கும் படம் `ஐங்கரன்'. நாயகனாக நடித்ததுடன் படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார் ஜி.வி பிரகாஷ். சரவணன் அபிமன்யு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். வெளியிடத் தயாராக இருந்தாலும், சில காரணங்களால் இந்தப் படம் ரிலீஸ் ஆகாமலே இருந்தது. சமீபத்தில் இந்தப் படம் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பும் இன்று நடந்திருக்கிறது. கூடவே படத்தின் புதிய டிரெய்லரையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்தி சினிமா இயக்கும் பாலாஜி மோகன்!

தமிழில் `காதலில் சொதப்புவது எப்படி', `வாயை மூடி பேசவும்', `மாரி' ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். தற்போது இவர் இந்தி சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். அந்த இந்தி படத்திற்கு `க்ளிக் ஷங்கர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜங்க்ளி பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு பாலாஜி மோகனின் பாலிவுட் படத்தை அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இந்தப் படம் பற்றிய மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகேஷ் பாபுவின் `சர்காரு வாரி பாட்டா' பட டிரெய்லர்!

பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு - கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் சர்காரு வாரி பாட்டா. தமன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் படம் மே 12ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories