1. எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் ‘கடமையை செய்’ ரிலீஸ் எப்போது?
எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெங்கட்ராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கடமையை செய்’. எஸ்.ஜே. சூர்யா ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்திருக்கும் இந்த படத்தின் ப்ரோடக்ஷன் மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் முடிவடைந்து ரிலீஸுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட இருக்கும் இந்த படத்தை இந்த மே மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் சரியான ரிலீஸ் தேதியுடன் டீஸர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2. தமன்னா பவுன்சராக நடிக்கும் புதிய பேன் இந்தியா படம்...
பல தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மதுர் பண்டர்க்கார், இவரது இயக்கத்தில் தமன்னா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துவரும் திரைப்படம் ‘பப்ளி பவுன்சர்’. வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட ஒரு பெண் பவுன்சரின் கற்பனைக் கதையாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் இந்த ஆண்டு இறுதியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
3 ‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை...

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே படத்தின் ப்ளாஷ் பேக் காட்சிகளில் இளம் கமலை திரையில் காட்ட டி ஏஜிங் தொழில்நுட்பத்தை படக்குழு பயன்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிளாஷ்பேக் காட்சியில் 10 நிமிடங்கள் பிரபல கன்னட நடிகை ஷவானி ஸ்ரீவத்ஸவா நடித்துள்ளதாகவும் அவரது காட்சிகள் படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜூன் 3ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
4. ஆர்யா முத்தையா கூட்டணியில் அடுத்த படம்…
இயக்கியவர் முத்தையா கார்த்தியை வைத்து அவர் விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஆர்யா நடிப்பில் முத்தையா ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த படத்தைக் கமல் தயாரிக்காமல் டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.
5. புதிய வெப் சீரிஸில் பிரியா பவானி சங்கர்… அமேசான் ப்ரைம் வெளியிட்ட அப்டேட்!
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான பிரியா பவாணி ஷங்கர் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான விக்ரம் குமார் இயக்கத்தில் ஒரு புதிய வெப் தொடரில் நடிக்கவுள்ளார். அமேசான் ப்ரைம் தயாரிக்கும் இந்த வேப் தொடரில் நாக சைதன்யா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரர் சீரிஸான இதற்கு ‘தோதா’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.








