சினிமா

Money Heist கொரியன் ரீமேக் ரிலீஸ் தேதி வெளியீடு.. 'டான்' படத்தின் அடுத்த சிங்கிள்! #5IN1_CINEMA

‘கே.ஜி.எஃப்-2 படம் ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Money Heist கொரியன் ரீமேக் ரிலீஸ் தேதி வெளியீடு..  'டான்' படத்தின் அடுத்த சிங்கிள்! #5IN1_CINEMA
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. ‘மணி ஹெய்ஸ்ட்’…. கொரியன் ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணைய தொடர் மணி ஹெய்ஸ்ட். இந்த தொடருக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உருவானதை கண்டு தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டனர். இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம், இந்த சீரிஸை கொரியன் மொழியில் ரீமேக் செய்துள்ளது. ஜூன் 24 ஆம் தேதி கொரியன் மொழியில் மணி ஹெய்ஸ்ட் வெளியாகும் என அறிவித்துள்ளது.

2. 1000 கோடி வசூல் செய்த ‘கே.ஜி.எஃப்-2’!

கன்னட திரைப்படமான கே.ஜி.எஃப்-ன் வெற்றி இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதுவரை இந்திய சினிமாவில் உருவான படங்களில் அமீர்கானின் ‘டங்கல்’ ராஜமௌலியின் ‘பாகுபலி 2’, ‘ஆர்.ஆர்.ஆர்’ ஆகிய படங்கள் உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த நிலையில் அந்த பட்டியலில் நான்காவதாக இணைந்துள்ளது பிரஷாந்த் நீலின் ‘கே.ஜி.எஃப் 2’. இந்த பிரம்மாண்ட வசூல் சாதனையை கே.ஜி.எஃப் 2 வெரும் 16 நாட்களில் எட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

3. டான் படத்தின் அடுத்த சிங்கிள் ‘ப்ரைவெட் பார்ட்டி’ வெளியானது!

லைகா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் ‘டான்’ படத்தின் வேலைகள் முடிவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. அட்லியின் உதவி இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகியுள்ள இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். வரும் மே 13ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே படத்தில் இருந்து ஜலபுல ஜங், பே ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இன்று ப்ரைவெட் பார்ட்டி எனும் பாடலை வெளியிட்டுள்ளனர்.

4. மிதாலிராஜ் வாழ்க்கை வரலாறு படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டாப்ஸி முனணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார், அமித் திரிவேதி இசையில், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5. ஜீ.வி. பிரகாஷின் அடுத்த படம் ரிலீஸுக்கு தயார்!

‘ஈட்டி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் உருவாகிருக்கும் ‘ஐங்கரன்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். 2017ஆம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் பல பிரச்சனைகள் காரணமாக ரிலீஸாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தியேட்டர் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. அதன்படி படம் வரும் 5ஆம் தேதி திரைக்கு வரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories