சினிமா

அடுத்தடுத்து தயாராகும் தமிழ் ‘வெப் சீரிஸ்’.. : அரவிந்த் சாமியின் அடுத்த பட ரிலீஸ் எப்போது..?#5IN1_CINEMA

அரண்மனை படங்களின் வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது.

அடுத்தடுத்து தயாராகும் தமிழ் ‘வெப் சீரிஸ்’.. : அரவிந்த் சாமியின் அடுத்த பட ரிலீஸ் எப்போது..?#5IN1_CINEMA
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1. புஷ்கர், காயத்ரி & SJ சூர்யா இணையும் வெப் சீரிஸ்...

தமிழி சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக வளர்ந்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் இயக்குனர் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் உருவாகிவரும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த வெப் தொடருக்கு “RUMOUR” எனத் தலைப்பு வைக்கப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2. சுந்தர். சி இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு என்ன..?

அரண்மனை படங்களின் வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை குஷ்பூவின் Avni Cinemax தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்புப் பற்றிய ஒரு தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்துக்கு ‘காஃபி வித் காதல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் மூலம் வின்னர் படத்துக்குப் பிறகு 19 ஆண்டுகள் கழித்து யுவன் – சுந்தர் சி கூட்டணி இணைந்துள்ளது.

3. ‘பிசாசு 2’ படத்தின் டீஸர் வெளியானது...

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘பிசாசு 2' படம் உருவாகி வருகிறது. ஆண்ட்ரியாவுடன் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கார்த்திக்ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிசாசு 2-ல் ஆண்ட்ரியா பெண் பாதிரியராக நடித்துள்ளார், முதல் பாகத்தை போலவே இந்த படத்தில் பல சுவாரஸ்யமான விஷங்கள் இருக்கும் என்பதை டீஸர் உறுதிப்படுத்தியுள்ளது.

4. அரவிந்த் சாமியின் அடுத்த பட ரிலீஸ் எப்போது..?

அரவிந்த் சாமி நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகிருக்கும் திரைப்படம் ‘கள்ளபார்ட்’. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடித்துள்ளார். என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தை வரும் 13ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு போஸ்டரோடு அறிவித்துள்ளது.

5. ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் வெப் சீரிஸ் ‘தி வில்லேஜ்’...

அவள், நெற்றிக்கண் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் மிலிந்த் ராவ் அமேசான் ப்ரைமுடன் கைக்கோர்த்து ஒரு வெப் சீரிஸ் இயக்கி வருகிறார். நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகிவரும் இந்த வெப் தொடரில் நாயகனாக ஆர்யா நடிக்கிறார். இத்தொடர்க்கு ‘தி வில்லேஜ்’ என தலைப்பை அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம்.

banner

Related Stories

Related Stories