தமிழ்நாடு

முதல் முறையாக ‘KGF 3’ குறித்து பேசிய நடிகர் யாஷ் : சமந்தாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு ! #5IN1_CINEMA

கே.ஜி எஃப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா என்கிற குழப்பம் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது

முதல் முறையாக ‘KGF 3’ குறித்து பேசிய நடிகர் யாஷ் : சமந்தாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு ! #5IN1_CINEMA
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1. முதல் முறையாக ‘கே.ஜி.எஃப் 3’ குறித்து பேசிய நடிகர் யாஷ்!

கன்னட திரைப்படமான கே.ஜி.எஃப்-ன் வெற்றி இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. கே.ஜி.எஃப் 2 படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரஷாந்த் நீல் பிரபாஸின் ‘சலார்’ படத்தையும் அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஒரு படத்தையும் இயக்குகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து கே.ஜி.எஃப் 3’ இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் யாஷ் “ கே.ஜி.எஃப் 2-ல் சொல்ல முடியாத சில விஷங்களை 3வது பகுதியில் சொல்லலாம் என திட்டமிட்டோம் ஆனால், அதை அப்படியே விட்டுவிட்டோம்” என கூறியுள்ளார். இதனால் கே.ஜி எஃப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா என்கிற குழப்பம் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.

2. வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் படம் குறித்த தகவல்!

https://twitter.com/kathiresan_offl/status/1519612875937312768

இயக்குனர் வெற்றிமாறனின் எழுத்தில் ராகவா லாரண்ஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் படம் ‘அதிகாரம்’. துரை சந்திரசேகர் இயக்கும் இந்த படத்தில் சில முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகளை விரைவில் துவங்க உள்ளதாகவும், படம் குறித்த அப்டேட்கள் வெளியிடப்படும் என்றும் லாரண்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

3. பார்டர் ரிலீஸில் சொதப்பிய தயாரிப்பாளர்…

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கி வரும் திரைப்படம் “பார்டர்”. குற்றம் 23 படத்தை தொடர்ந்து அருண் விஜய் – அறிவழகன் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகும் இந்த படத்தில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்துள்ளார். பல காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிச்சென்ற நிலையில் தற்போது புதிய சிக்கல் உருவாகியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் உரிமையை இரண்டு பேரிடம் விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரிலீஸில் மேலும் சிக்கல் உருவாகியுள்ளது.

4. வாலி ஹிந்தி ரீமேக் விவகாரம், வழக்கில் வந்த முக்கிய தீர்ப்பு!

அஜித்தின் வாலி படத்தை 22 ஆண்டுகள் கழித்து இந்தியில் ரீமேக் செய்ய முயற்சித்தனர். போனி கபூர் தயாரிக்க இருந்த அந்த படத்தின் மீது வாலி படத்தின் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ரீமேக் சம்மந்தப்பட்ட உரிமைகள் அனைத்தும் தயாரிப்பாளர் வசமே உள்ளதாக கூறி போனி கபூர் ரீமேக் செய்ய எந்த தடையும் இல்லை என தீர்ப்பு வழங்கினர். இதையெதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இயக்குனர் எஸ் ஜே சூர்யா மேல் முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பொருத்தே இந்த படத்தின் ரீமேக் சிக்கல் முடிவுக்கு வரும்.

5. சமந்தாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு - வைரல் வீடியோ!

நேற்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடினார் நடிகை சமந்தா. தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வரும் இவர் தற்போது ஷாகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் சோலோ நாயாகியாக நடித்து வருகிறார். இதனுடன் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஒரு படம் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து சமந்தாவிற்கு சர்ப்ரைஸ் கேக் கட்டிங் நடந்துள்ளது. இதற்கு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் சமந்தா.

banner

Related Stories

Related Stories