சினிமா

எலான் மஸ்க்கிற்கு ‘நரகாசூரன்’ இயக்குநரின் கோரிக்கை.. வெளியானது மோகன்லால் பட டீசர்! #CINEMAUPDATES

மலையாள நடிகர் மோகன்லாலின் `12th Man' படத்தின் டீசர் வெளியானது!

எலான் மஸ்க்கிற்கு ‘நரகாசூரன்’ இயக்குநரின் கோரிக்கை.. வெளியானது மோகன்லால் பட டீசர்! #CINEMAUPDATES
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. `கூகுள் குட்டப்பா' பட பாடல் வெளியானது!

மலையாளத்தில் வெளியான `ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது `கூகுள் குட்டப்பா'. இந்தப் படத்தை தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். இவருடன் தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, ப்ராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சபரி - சரவணன் என்ற இரட்டை இயக்குநர்கள் இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். மே 6ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்திலிருந்து `சூரத்தேங்கா' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

2. "நரகாசூரனை வாங்கிக் கொள்ளுங்கள் எலான் மஸ்க்" - கார்த்திக் நரேன்!

`துருவங்கள் பதினாறு' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்தப் படத்தைத் தொடர்ந்து, அவர் `நரகாசூரன்' என்ற படத்தை இயக்கினார். அரவிந்த் சுவாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரான் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பல பட நெருக்கடி காரணமாக இந்தப் படம் இன்று வரை வெளியாகாமல் உள்ளது. இதற்கடுத்து கார்த்திக் இயக்கிய, `மாஃபியா', `மாறன்' ஆகிய படங்கள் வெளியாகிவிட்டது. ஆனால் இன்னும் `நரகாசூரன்' வெளியாகவில்லை. சமீபத்தில் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதாக செய்திகள் வெளியானது. உடனே கார்த்திக் நரேன், "எலான் மஸ்க், நரகாசூரன் படத்தை வாங்கிக் கொள்ளுங்கள். மேலும் அதை நீங்கள் மார்ஸுக்கு செல்லும் முன்பு ரிலீஸ் செய்துவிட்டுச் செல்லுங்கள்" என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். இதை இப்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

3. மீண்டும் தள்ளிப்போகும் `மேஜர்' திரைப்படம்!

நடிகர் மகேஷ்பாபு தயாரிப்பில் சசி கிரண் இயக்கியிருக்கும் தெலுங்குப் படம் 'மேஜர்'. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இந்தப் படம். நடிகர் அத்வே ஷேஷ் இந்தப் படத்தில் சந்தீப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கூடவே ஷோபிதா, பிரகாஷ் ராஜ், ரேவதி, முரளி ஷர்மா ஆகியோரும் நடித்துள்ளனர். 2020லேயே இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் கொரோனா காரணமாக தள்ளிவைக்கபட்டது. சமீபத்தில் மே 27ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு, புதிய ரிலீஸ் தேதியாக ஜூன் 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

4. வெளியானது மோகன்லாலின் `12th Man' டீசர்!

மலையாள சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியவர் ஜீத்து ஜோசஃப். இவர் மோகன்லால் நடிப்பில் இயக்கிய த்ரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றியடைந்தது. கூடவே பல மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது. தற்போது இவர் இயக்கத்தில் மீண்டும் மோகன்லால் நடித்திருக்கும் படம் `12த் மேன்' (12th Man). இந்த திரைப்படம் விரைவில் நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

5. ஜெயசூர்யாவின் `ஜான் லூத்ர்' பட ரிலீஸ் தேதி!

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஜெயசூர்யா. இப்போது இவர் நடிப்பில் ஈஷோ, மேரே ஆவாஸ் சுனோ, படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதேபோல ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் அபிஜித் ஜோசப் இயக்கத்தில் ஜெயசூர்யா நடித்திருக்கும் `ஜான் லூதர்'. சமீபத்தில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. செவிதிறன் சவால் கொண்ட ஒரு போலிஸ் அதிகாரியைப் பற்றிய படமாக உருவாகியிருக்கிறது இந்தப் படம். தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். மே 27ஆம் தேதி வெளியாக உள்ளது படம்.

banner

Related Stories

Related Stories