சினிமா

திருமணம் செய்யக்கூறி பெண்ணிடம் மிரட்டல்.. பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளருக்கு காப்பு மாட்டிய போலிஸ்!

திருமணம் செய்துக்கொள்ள கூறி தொந்தரவு கொடுத்த வழக்கில் சினிமா தயாரிப்பாளரை போலிஸார் கைது செய்தனர்.

திருமணம் செய்யக்கூறி பெண்ணிடம் மிரட்டல்.. பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளருக்கு காப்பு மாட்டிய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிவா மனசுல புஷ்பா உட்பட சில திரைப்படங்களை தயாரித்தவர் வாராகி. இவர் விருகம்பாக்கம் நடேசன் நகரில் அமைந்துள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவர் அதே குடியிருப்பில் வசித்து வரக்கூடிய 31 வயது பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுமாறு நீண்ட மாதங்களாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த பெண் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வாராகி மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலிஸார் தயாரிப்பாளர் வாராகியை கைது செய்தனர்.

வாராகி மீது பெண் வன்கொடுமை சட்டம், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஏற்கெனவே வாராகி மீது சேலையூர் உட்பட 4 காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட வாராகியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories