இந்தியா

நடுரோட்டில் மக்கள் கண்முன்னே இளைஞர் குத்தி கொலை.. பாஜக ஆளும் உ.பி-யில் கொடூரம்: பதற வைக்கும் CCTV காட்சி!

உத்தர பிரதேசத்தில் பட்டப்பகலில் இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுரோட்டில் மக்கள் கண்முன்னே இளைஞர் குத்தி கொலை.. பாஜக ஆளும் உ.பி-யில் கொடூரம்: பதற வைக்கும் CCTV காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் இளைஞர் ஒருவரை நடுரோட்டிலேயே மூன்று பேர் கொண்ட கும்பல் குத்தி கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் வந்த ஒருவர் குத்தியால் குத்துகிறார். இதில் அந்த நபர் கீழே விழும்போது, மேலும் இரண்டு பேர் ஓடிவந்து கீழே விழுந்தவரைச் சரமாரியாகக் குத்திவிட்டு மூன்று பேறும் அங்கிருந்து தப்பி ஓடிச்செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் பட்டப்பகலில், பொதுமக்கள் கண் முன்னே நடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும் கொலை செய்த மூன்று பேரை இதுவரை போலிஸார் கைது செய்யவில்லை என கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட இளைஞர் யார்? எதற்காகக் கொலை நடந்தது என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories