சினிமா

வெளியானது மார்வல் ஸ்டுடியோஸின் அடுத்த பட டீசர்.. ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? குஷியில் தோர் ரசிகர்கள்!

பெரும் காத்திருப்பிற்கு பின் ஆன்லைனில் வெளியான Thor: Love and Thunder டீசர் வெளியான சில மணிநேரங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வெளியானது மார்வல் ஸ்டுடியோஸின் அடுத்த பட டீசர்.. ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? குஷியில் தோர் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மார்வல் ஸ்டுடியோஸின் 4வது phase-n கடைசி படமாக வெளியாக இருக்கிறது Thor: Love and Thunder படம். அடுத்த அவெஞ்சர்ஸ் பட சீரிஸுக்கு முதன்மையான கதாப்பாத்திரமாக தோர் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் தோர் உடன் பிரபலமான ஹாலிவுட் நடிகையான நடாலி ஃபோர்ட்மேன் நடித்திருக்கிறார்.

இந்த ‘thor love and thunder’ படத்தில் கொஞ்சம் ஆக்‌ஷனோட சேர்ந்து காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருப்பதாக இயக்குநர் டைக்கா வைட்டிடி கூறியிருக்கிறார். இந்த படத்துக்கான ஷூட்டிங் பணிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அடுத்தக்கட்ட ஷெடியூல் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தோர் சீரிஸோட 4வது பாகமாக வெளியாக இருந்த இந்த தோர் லவ் அண்ட் தண்டர் படத்தை தொடர்ந்து தோர் 5 உருவாகுமா என ரசிகர்கள் இயக்குனர் டைக்காவிடம் கேட்டதற்கு “அது சம்மந்தமான ஐடியா எதும் இப்போதைக்கு என்கிட்ட இல்ல, நான் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்ப சரி செஞ்சிருக்கன், என்னோட முழு உழைப்பையும் இந்த தோர் படத்துல கொடுத்துருக்கன், மார்வெலோட அடுத்தடுத்த படங்கள் தான் தோர் 5 பற்றிய தீர்மானத்த கொடுக்கும்” என கூறியிருக்கார்.

இந்த படத்தில் பேட்மேன் பட நடிகர் Christian Bale-ம் Mephistoங்குற முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். கூடவே தோரோட அப்பா ஓடின் கேரக்டர்ல ரஸ்ஸல் க்ரோ நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் Zeus-ங்குற கேரக்டர்ல தோரோட வில்லனா வர போவதாக அவரே உறுதிப்படுத்திருக்கார்.

இந்த நிலையில், 'தோர்: லவ் அண்ட் தண்டர்' ஜூலை 8 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories