சினிமா

“ஆரம்பிக்கலாங்களா..?” - ‘விக்ரம்’ ஃபர்ஸ்ட் லுக்.. ரயிலில் ஸ்டிக்கர் ஒட்டி அசத்தல் : வைரலாகும் வீடியோ!

‘விக்ரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விளம்பரம் ரயிலில் செய்யப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

“ஆரம்பிக்கலாங்களா..?” - ‘விக்ரம்’ ஃபர்ஸ்ட் லுக்.. ரயிலில் ஸ்டிக்கர் ஒட்டி அசத்தல் : வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குநராகியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் `விக்ரம்' படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

விக்ரம் படத்தை தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. படத்தில் மூன்று பெரிய ஹீரோக்கள் இணைந்து நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், விக்ரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஈரோட்டில் ரயில் ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதுதொடர்பான வீடியோவை தென்னக ரயில்வே தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் படத்தின் தீம் மியூசிக் ஒலிக்க ரயில் புறப்படும் காட்சி பலரும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

“ஆரம்பிக்கலாங்களா..?” - ‘விக்ரம்’ ஃபர்ஸ்ட் லுக்.. ரயிலில் ஸ்டிக்கர் ஒட்டி அசத்தல் : வைரலாகும் வீடியோ!
“ஆரம்பிக்கலாங்களா..?” - ‘விக்ரம்’ ஃபர்ஸ்ட் லுக்.. ரயிலில் ஸ்டிக்கர் ஒட்டி அசத்தல் : வைரலாகும் வீடியோ!
“ஆரம்பிக்கலாங்களா..?” - ‘விக்ரம்’ ஃபர்ஸ்ட் லுக்.. ரயிலில் ஸ்டிக்கர் ஒட்டி அசத்தல் : வைரலாகும் வீடியோ!
“ஆரம்பிக்கலாங்களா..?” - ‘விக்ரம்’ ஃபர்ஸ்ட் லுக்.. ரயிலில் ஸ்டிக்கர் ஒட்டி அசத்தல் : வைரலாகும் வீடியோ!
banner

Related Stories

Related Stories