சினிமா

"இதவிட இன்னும் பயங்கரமா இருக்கும்..” : 4 மில்லியன் பார்வைகளை கடந்த ‘Beast’ ட்ரெய்லர்! #5in1_Cinema

இரண்டு நாட்களாக ‘பீஸ்ட்’ ட்ரெய்லருக்கு காத்திருந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெய்லரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

"இதவிட இன்னும் பயங்கரமா இருக்கும்..” : 4 மில்லியன் பார்வைகளை கடந்த ‘Beast’ ட்ரெய்லர்! #5in1_Cinema
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. 4 மில்லியன் பார்வைகளை கடந்த ‘பீஸ்ட்’ ட்ரெய்லர்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரிலீஸுக்கு தயாராகிவரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. ஏப்ரல் 13ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இதனிடையே படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது படக்குழு. இரண்டு நாட்களாக இந்த ட்ரெய்லருக்கு காத்திருந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெய்லரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

2. கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோனா’ டீஸர் வெளியானது!

கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் 3-D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது “விக்ராந்த் ரோணா”. Pan India படமான இதில் சுதீப் ஜோடியாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்துள்ளார். அனுப் பண்டாரி இயக்கியுள்ள இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் படத்தை ஜூலை 28ஆம் தேதி வெளியிட இருப்பதை உறுதிசெய்து புதிய டீஸர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

3. ‘டைகர்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு ‘டைகர் நாகேஷ்வர ராவ்’ என தலைப்பு அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில் நாயகிகளாக நுபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் பூஜையுடன் துவங்கியுள்ளது கூடவே படத்தின் ப்ரீ லுக் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

4. “தி வாரியர்” படத்திலிருந்து ராம் பொத்தினேனியின் ஸ்டைலிஷ் போலீஸ் லுக்!

நடிகர் ராம் பொதினேனி நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் “தி வாரியர்” படத்தின் ஷூட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் ஜூலை 14ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. இந்நிலையில் ராம் பொத்தினேனியின் போலிஸ் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் ராம் பொதினேனி கதாபாத்திரம் அசத்தும் தோரணையுடன் கவலையற்ற அணுகுமுறையுடனும் இருப்பதை படக்குழு உறுதிசெய்துள்ளது.

5. விஜய் தேவரகொண்டாவின் ‘லிகர்’ படத்தின் டப்பிங்கை துவங்கிய குத்துசண்டை வீரர்!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லிகர்’. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமாக உருவாகிவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளார்.

குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து டப்பிங் பணிகளை துவங்கியுள்ளனர். முதற்கட்டமாக மைக் டைசன் தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசி வருகிறார். படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

banner

Related Stories

Related Stories