சினிமா

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரியங்கா சோப்ரா... இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு!

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரியங்கா சோப்ரா... இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் தம்பதி, வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழில், விஜய் ஜோடியாக அறிமுகமாகி இந்தியில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. இப்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்துவருகிறார். தற்போது ஜோயா அக்தர் தயாரிப்பில் கேத்ரினா கைஃப் மற்றும் ஆலியா பட் நடிக்கும் ஜி லீ ஜாரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பிரியங்கா சோப்ரா, கடந்த 2018 -ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டார். பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனஸ் 10 வயது இளையவர்.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரியங்கா சோப்ரா... இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு!

சில மாதங்களுக்கு முன் குடும்பம் மற்றும் குழந்தையுடன் இருக்க விரும்புவதாக பிரியங்கா சோப்ரா ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். எங்கள் இருவருக்கும் குழந்தையை வளர்க்க விருப்பம் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் தம்பதி, வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். அமெரிக்க ஊடகங்கள், இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளன.

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, "வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றதில், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். இந்த சமயத்தில் எங்கள் குடும்பத்துடன், நாங்கள் தனிமையில் இருக்க விரும்புகிறோம். அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories