தமிழ்நாடு

இந்தியாவிலேயே முதல் முறையாக Metaverse கெட்டிமேளம்.. புதுமண ஜோடியின் டிஜிட்டல் ஏற்பாடு - எப்படி இருக்கும்?

இந்தியாவிலேயே முதல் முறையாக மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மணமக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக Metaverse கெட்டிமேளம்.. புதுமண ஜோடியின் டிஜிட்டல் ஏற்பாடு - எப்படி இருக்கும்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவிலேயே முதல் முறையாக மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மணமக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த ராமசாமி மகள் ஜனகநந்தினி (23). பி.டெக் பட்டதாரியான இவர்,சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஜனகநந்தினிக்கும், சென்னை ஐ.ஐ.டி.,யில் புராஜெக்ட் அசோசியேட்டாக பணியாற்றி வரும் பி.டெக் பட்டதாரி தினேஷ் (25) என்பவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் ஜனகநந்தினியின் தந்தை ராமசாமி உயிரிழந்தார். தனது தந்தை பார்த்துவைத்த மணமகனை மணக்க ஜனகநந்தினி முன்வந்தார். அதற்கு மணமகன் தினேஷ் சம்மதம் தெரிவித்தார். உயிரிழந்த தனது தந்தை ராமசாமி தலைமையில் திருமணம் நடக்க வேண்டும் என மணமகள் ஜனகநந்தினி விரும்பினார்.

இதனால் வரும் பிப்.,6ஆம் தேதி திருமணம் முடிந்த பின், மெட்டாவெர்ஸ் முறையில் திருமண வரவேற்பு நடத்த மணமகன் தினேஷ் முடிவு செய்துள்ளார். மெட்டாவெர்ஸ் என்பது தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப் படும் மெய்நிகர் உலகம். இதில் நுழைபவர்கள் எல்லாரும் டிஜிட்டல் அவதாரம் எடுப்பார்கள்.

பிப்.,6ஆம் தேதி, திருமணம் முடிந்த பின், திருமண வரவேற்பில் மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் டிஜிட்டல் அவதாரமாக பங்கேற்கலாம். ஹாரிபாட்டர் படங்களில் வரும் மேஜிக் உலகமான ஹாக்வார்ட்ஸ் மாளிகையில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது.

மணமகளின் தந்தையான மறைந்த ராமசாமியின் டிஜிட்டல் அவதாரம் இந்த மெட்டாவெர்ஸ் திருமணத்திற்கு தலைமை வகிக்கும். விருந்தினர்களும் டிஜிட்டல் அவதாரங்களாக வந்து, மணமக்களை ஆசிர்வதிப்பார்கள். இதுவே இந்தியாவில் நடக்கும் முதல் மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பு என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories