சினிமா

வாழ்க்கையில் திடீரென ஏற்படும் சிக்கல்... என்ன சொல்கிறது ‘Truman Show’ திரைப்படம்?

இன்றைய உலகில் நிலவும் போலித்தனமும் கட்டமைப்பும் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை மிக அழகாகச் சொல்லும் படம் Truman Show.

வாழ்க்கையில் திடீரென ஏற்படும் சிக்கல்... என்ன சொல்கிறது ‘Truman Show’ திரைப்படம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Truman Show, மிகவும் முக்கியமான படம். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இருக்கிறது.

ஒரு வழக்கமான வாழ்க்கை வாழும் நாயகன். மிகவும் நேர்மறையாக வாழ்பவன். எல்லாரிடமும் அன்பு செலுத்துபவன். புன்னகை சிந்துபவன். நம்பிக்கை அளிப்பவன். மணமானவன்.

எல்லாமே சரியாக இருக்கும் வாழ்க்கையில் ஏதோவொரு பிரச்சினை இருப்பது போல் உணர்கிறான். அவ்வப்போது அவனது மனைவியின் நடத்தையும் முரணாக இருப்பதை கவனிக்கிறான். அப்பா கிடையாது. அப்பாவை பற்றிய நினைவு அவனுக்கு இருக்கிறது. திடுமென ஒரு நாள் சாலையில் அவனது அப்பாவை எதிர்கொள்கிறான். அவரிடம் சென்று பேச அவன் முனைகையில் அவர் ஓடத் துவங்குகிறார். எங்கு போனாரென தெரியவில்லை. மீண்டும் அடுத்த நாள் அதே இடத்துக்குச் சென்று பார்க்கிறான். அப்பா வரவில்லை.

சந்தேகம் கொள்ளத் தொடங்குகிறான் நாயகன். எல்லாமே சரியாக இருக்கும் அவ்வுலகில் போலித்தனத்தை உணர்கிறான். அங்கிருந்து வெளியேற முயல்கிறான். அவனது ஒவ்வொரு முயற்சியும் தோற்கிறது. வெளியூருக்கோ வெளிநாட்டுக்கோ செல்ல விரும்பும் அவனது முயற்சிகள் ஏதோவொரு வகையில் தடைபடுகிறது. அத்தடைகள் யாவும் திட்டமிடப்பட்டதைப் போன்ற தோற்றம் அளிக்கின்றன.

இடையில் ஒரு பெண் வருகிறாள். நாயகன் அவளை காதலிக்கிறான். அந்தப் பெண்ணும் நாயகனை உண்மையாக நேசிக்கிறாள். ஆனால் நீடிக்கவில்லை. அவளும் திடீரென காணாமல் போகிறாள்.

வாழ்க்கையில் திடீரென ஏற்படும் சிக்கல்... என்ன சொல்கிறது ‘Truman Show’ திரைப்படம்?

அத்தனை பெரிய உலகில் நாயகன் அத்தனை பேர் மத்தியில் வாழ்ந்தும் அளவுகடந்த தனிமையில் உழலுகிறான். அனைவரிடமும் சொல்லி அவ்வுலகின் சிக்கலை புரியவைக்க முயன்று தோற்கிறான். எவரும் தனக்கானவராக இல்லாமல் எல்லாருமே அந்நியர்களாக தெரிகிறார்கள். நாயகனுக்கு கையறுநிலை.

திடீரென ஒருநாள் நாயகன் காணாமல் போகிறான். ஆச்சரியகரமாக ஊர் மக்கள் அனைவருமே அவனைத் தேடுகிறார்கள். நாயகன் கிடைக்கவே இல்லை. ஊருக்குள் நாயகன் இல்லை. அவனது ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் அவன் இருக்கிறான்.

ஒரு பாய்மர படகில் கடலின் நடுவே நாயகன்!

எங்கிருக்கிறது எனத் தெரியாத, தான் விரும்பும் உலகை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறான். தடாலென மழை பொழிகிறது. வாய்ப்பே இன்றி சட்டென புயலடிக்கிறது. நாயகன் எதற்கும் அசரவில்லை. கடலுக்குள் விழுந்துவிடக் கூடாது என கயிறுகளால் தன்னை தானே படகுடன் கட்டிக் கொள்கிறான்.

வானத்தை நோக்கி, "இவ்வளவுதான் உன்னால் சாத்தியமா? என்னைக் கொல்லாமல் நீ என்னை தோற்கடிக்க முடியாது" எனக் கத்துகிறான்.

வாழ்க்கையில் திடீரென ஏற்படும் சிக்கல்... என்ன சொல்கிறது ‘Truman Show’ திரைப்படம்?

புயல் ஓய்கிறது. நாயகன் சுயநினைவு அடைகிறான். படகு அதன் போக்கில் மிதந்து கொண்டிருக்கிறது. எழுந்து அமர்ந்து நம்பிக்கையுடன் தொடுவானத்தை பார்க்கிறான். சட்டென படகு தொடுவானத்தை முட்டி நிற்கிறது. அதிர்ந்துபோய் நாயகன் எழுந்து சென்று படகின் விளிம்பில் நின்று தொடுவானத்தை நோக்கிக் கையை நீட்ட முயலுகிறான். அவன் கையின் நிழல் தொடுவானத்தின் மீது படிகிறது.

அது தொடுவானம் அல்ல, சுவர்!

இன்றைய உலகில் நிலவும் போலித்தனமும் கட்டமைப்பும் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை மிக அழகாக வணிகச் சட்டகத்தில் பொருத்திச் சொல்லும் படம் Truman Show. நகைச்சுவை நடிப்புக்கு பெயர் பெற்ற ஜிம் கேரி நடித்தப் படம்.

பார்த்து விடுங்கள்.

banner

Related Stories

Related Stories