சினிமா

மீண்டும் அமைகிறதா கோலிவுட்டின் மெகா ஹிட் கூட்டணி? குஷியான ரஜினி ரசிகர்கள்!

ரஜினிகாந்த் தானாக முன்வந்து கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்து அடுத்த படத்துக்கான கதையை தயாரிக்க கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அமைகிறதா கோலிவுட்டின் மெகா ஹிட் கூட்டணி? குஷியான ரஜினி ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்ணாத்த பட ஷுட்டிங்கின் போதே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற வித்தியாசமான கதையமைப்பில் படம் எடுத்த தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பல வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார்தான் தன்னுடைய அடுத்த படத்திற்கான தேர்வாக ரஜினிகாந்த் வைத்துள்ளார் என அண்மைக்கால தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் அமைகிறதா கோலிவுட்டின் மெகா ஹிட் கூட்டணி? குஷியான ரஜினி ரசிகர்கள்!

அதன்படி, ஐந்து இளம் இயக்குநர்கள் ரஜினியிடம் ஒன்லைன் கூறியிருப்பதாகவும் அது ரஜினிக்கு பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் தன்னுடைய பார்வையை கே.எஸ்.ரவிக்குமாரிடம் திருப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இதற்காக கே.எஸ்.ரவிக்குமாரிடம் நல்ல கதையாக தயார் செய்யும்படி ரஜினி கூறியிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகின்றன. இதுபோக, அந்த கதை பாதியில் நின்றுபோன ரானாவாகக் கூட இருக்கலாம் எனவும் கிசுக்கிசுக்கப்படுகின்றன.

இந்த தகவலை அறிந்த சினிமா ரசிகர்கள் முத்து, படையப்பா, லிங்காவை தொடர்ந்து ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மீண்டும் படம் அமைந்தால் கட்டாயம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று தீர்க்கமாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories