சினிமா

வாலி ரீமேக்கில் தொடங்கியது சர்ச்சை : “அஜித் இல்லனா நானே நடிப்பேன்” - எஸ்.ஜே.சூர்யா திட்டவட்டம்?

அஜித்தின் வாலி பட ரீமேக் குறித்து தயாரிப்பாளர் போனி கபூருக்கு எதிராக எஸ்.ஜே.சூர்யா வழக்குத் தொடர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாலி ரீமேக்கில் தொடங்கியது சர்ச்சை : “அஜித் இல்லனா நானே நடிப்பேன்” - எஸ்.ஜே.சூர்யா திட்டவட்டம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் குமார், சிம்ரன் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான படம் ‘வாலி’. இந்த படம் எஸ்.ஜே.சூர்யாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் இரட்டை வேடங்களில் நடித்த அஜித்திற்கு அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுத் தந்தது.

தற்போது இந்த படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நடந்து வருகிறது. இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் ஒரு புறம் இருக்க சர்ச்சைகளும் அதனூடே துவங்கிவிட்டது.

அதன்படி, வாலி படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியிருக்கிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்த படத்திற்கான வேலைகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாலி இந்தி ரீமேக்கில் அஜித் நடிக்கவில்லை என்றால் தானே அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக எஸ்.ஜே.சூர்யா கூறுவதாகவும், படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளரிடம் இருந்தாலும் ரீமேக் உரிமை திரைக்கதை எழுதியவருக்கே உண்டு.

வாலி ரீமேக்கில் தொடங்கியது சர்ச்சை : “அஜித் இல்லனா நானே நடிப்பேன்” - எஸ்.ஜே.சூர்யா திட்டவட்டம்?

அதற்கு சமீபத்திய ‘ஆரண்ய காண்டம்’ பட நீதிமன்ற தீர்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வாலி இந்தி ரீமேக்கை எதிர்த்து வழக்கு தொடர எஸ்.ஜே.சூர்யா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வாலி இந்தி ரீமேக் துவங்குவதற்கு முன்பே பெரும் சர்ச்சைகளை சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சமீப நாட்களாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் அனைத்தும் அவரது நடிப்பு திறமையை பறை சாற்றும் விதமாக இருப்பதால் வாலி படத்தில் வரும் அஜித்தின் கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்தால் பொருத்தமாகவே இருக்கும் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் போனிகபூரின் தயாரிப்பில் ஏற்கெனவே அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை வெளியான நிலையில் தற்போது வலிமை படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. இதுபோக அடுத்தாக உருவாக இருக்கும் அஜித் படத்தையும் போனி கபூரே தயாரிக்க இருக்கிறார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இப்படி இருக்கையில் வாலி பட சர்ச்சையை அஜித் தலையிட்டு போனி கபூர் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இடையெ சுமூகமான பேச்சுவார்த்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் கிசுக்கிசுக்கின்றன.

banner

Related Stories

Related Stories