சினிமா

”இனி என்னை இப்படியே குறிப்பிட்டு அழையுங்கள்; போதும்” - நடிகர் அஜித்குமார் முக்கிய வேண்டுகோள்!

ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

”இனி என்னை இப்படியே குறிப்பிட்டு அழையுங்கள்; போதும்” - நடிகர் அஜித்குமார் முக்கிய வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கக் கூடிய நடிகர் அஜித் குமார் தன்னை எந்த பட்ட பெயருடன் அழைக்கவோ குறிப்பிடவோ வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அது தொடர்பான அறிக்கையை அவரது மக்கள் தொடர்பாளரான (PRO) சுரேஷ் சந்திரா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது கன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,

இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போட் வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவரின் அரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை வேண்டாம் என மறுத்தவர் தற்போது ’தல’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுவதையும் வேண்டாம் என்று மறுத்துள்ளார்.

அஜித்துக்கு ‘தல’ என்ற செல்லப் பெயர் தீனா படத்தில் இருந்து அழைக்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories