சினிமா

முதல் முறையாக தியேட்டரில் வெளியாகிறது சூர்யாவின் சூரரைப் போற்று; எங்கு தெரியுமா?

அமேசான் ப்ரைமில் வெளியான சூரரைப் போற்று படம் முதல் முறையாக தியேட்டரில் வெளியாக இருக்கிறது.

முதல் முறையாக தியேட்டரில் வெளியாகிறது சூர்யாவின் சூரரைப் போற்று; எங்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சூர்யாவின் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சூரரைப் போற்று படம் கடந்த ஆண்டு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் வரவேற்பை பெற்றது.

சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் என பலர் நடித்திருந்தனர்.

உணர்ச்சிப்பூர்வமான கதையாக இருந்த சூரரைப் போற்று படத்துக்கு மக்கள் மத்தியிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றிருந்த போதும் திரையரங்குகளின் ரசிகர்களின் ஆரவாரத்துடன் படத்தை பார்க்கவில்லையே என்ற ஏக்கம் பலரிடமும் ஏற்பட்டது.

இந்த நிலையில், கேரள திரையரங்கில் சூர்யாவின் சூரரைப் போற்று படம் திரையிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கேரளாவில் உள்ள சில திரையரங்குகளில் விஜய்யின் கில்லி, துப்பாக்கி என பல வெற்றிப் படங்களை தொடர்ந்து திரையிடப் பட்டு வருகிறது.

அந்த வகையில் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை பத்மனாப தியேட்டரில் டிசம்பர் 12ம் தேதி திரையிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு தமிழ்நாட்டை தாண்டி கேரளா, ஆந்திரா, தெலங்கானாவிலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளதால் இந்த செய்தி அவர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories