சினிமா

கோப்ரா, மகான் என தொடர் பிசியில் இருக்கும் விக்ரம்.. வெளியானது சியான் 61 பட அப்டேட்!

மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் விக்ரமின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கோப்ரா, மகான் என தொடர் பிசியில் இருக்கும் விக்ரம்.. வெளியானது சியான் 61 பட அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் விக்ரம். கதைக்கு பாந்தமாக இருக்கும் வகையில் உடலை இளைத்தும் ஏற்றியும் பல்வேறு மாறுபட்ட வேடங்களில் நடித்து தனக்கென முத்திரையை திரைத்துறையில் தொடர்ந்து பதித்து வருகிறார்.

கடாரம் கொண்டான் படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜுடனான மகான், அஜய் ஞானமுத்து இயக்கத்திலான கோப்ரா, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்து நடித்து வருகிறார் விக்ரம்.

இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி வரும் பா.ரஞ்சித்துடன் முதல் முறையாக நடிகர் விக்ரம் இணையவுள்ளார்.

விக்ரமின் 61வது படமாக உருவாக உள்ள இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அறிவிப்பை தயாரிப்பாளரே வெளியிட்டுள்ளார்.

சார்பேட்டா பரம்பரை பட வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் விக்ரம் இணைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு முற்றிலும் மாறுபட்ட கதையம்சமாக இருக்கும் என்றும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories