சினிமா

”அது நான் இல்லைங்க; அந்த இயக்குநர் யாருனே தெரியாது” - பதறிப்போன கவுதம் மேனன் ட்வீட்!

அன்புச்செல்வன் படம் குறித்து கவுதம் மேனன் வெளியிட்ட பதிவால் இணையத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

”அது நான் இல்லைங்க; அந்த இயக்குநர் யாருனே தெரியாது” - பதறிப்போன கவுதம் மேனன் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குநராக வலம் வந்த கவுதம் மேனன் தற்போது நடிப்பிலும் படு பிசியாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களை விட பல படங்களில் நடித்து வருகிறார்.

தான் இயக்கும் படங்களில் ஒரு காட்சியில் மட்டுமே வந்து செல்லும் கவுதம் மேனன் தற்போது ஹீரோவாகவும் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. கவுதம் மேனன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் விஷ்ணு விஷால் வெளியிடுவதாகவும் அறிவிப்பு வெளியானது.

”அது நான் இல்லைங்க; அந்த இயக்குநர் யாருனே தெரியாது” - பதறிப்போன கவுதம் மேனன் ட்வீட்!

அதன்படியே கவுதம் மேனன் அன்புச்செல்வன் என பெயரிடப்பட்ட படத்தில் போலிஸ் அதிகாரியாக நடிக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால் கவுதம் மேனனோ போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியாகவும், புதிதாகவும் உள்ளது.

நான் நடிப்பதாக கூறப்படும் இந்த படத்தை பற்றி எதுவுமே தெரியாது. போஸ்டரில் குறிப்பிட்டுள்ள இயக்குநரை சந்தித்தது கூட கிடையாது. தயாரிப்பாளரும் மிகப்பெரிய பிரபலங்களை வைத்து போஸ்டர் வெளியிட வைத்திருப்பது பயமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருவதோடு பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories