சினிமா

”மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்”- சூர்யா வெளியிட்ட பரபர அப்டேட்!

20 ஆண்டுகளுக்குப்பிறகு இயக்குநர் பாலாவுடன் இணையும் நடிகர் சூர்யா.

”மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்”- சூர்யா வெளியிட்ட பரபர அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி தனக்கான முத்திரையை அழுத்தமாக பதித்திருக்கும் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பாலா.

இவரது இயக்கத்தில் இதுகாறும் வெளியான அனைத்து படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் அர்ஜூன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா படத்தினால் பாலாவுக்கு பல்வேறு சிக்கல்கள் நேர்ந்தது.

இருப்பினும் சோர்ந்துவிடாமல் அடுத்த பட வேலைகளில் தனது முழு கவனத்தை செலுத்தினார். அவ்வகையில், பாலாவின் அடுத்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.

அதனை உறுதிபடுத்தும் விதமாக நடிகர் சூர்யாவே சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்... அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…” எனக் குறிப்பிட்டு இயக்குநர் பாலா, தந்தை சிவக்குமார் உடன் இருக்கும் போட்டைவையும் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், சூர்யா - பாலா கூட்டணியில் ஏற்கெனவே வெளியான பிதாமகன், நந்தா படங்கள் பட்டித்தொட்டியெங்கும் பட்டையக்கிளப்பியது.

ஆகவே 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இவர்கள் கூட்டணி இணையவிருப்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், பாலா இயக்கப்போகும் இந்த படத்தில் நாயகனாக அதர்வா, கீர்த்தி சுரேஷும், ஐஸ்வர்யா ராஜேஷும் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சூர்யா இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆனால் குறுகிய கால படமாக உருவாகும் இதை சீக்கிரமே முடித்து ஓடிடியில் ரிலிஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக வரும் டிசம்பர் மாதம் படத்தின் பணிகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories