சினிமா

”மண்ணின் கதை; பெரும் மகிழ்ச்சி” : Special Entry கொடுத்த பாலா - இணையத்தை கலக்கும் கார்த்தியின் ’விருமன்’ !

கார்த்தி ஜோடியாக அறிமுகமாகிறார் இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி.

”மண்ணின் கதை; பெரும் மகிழ்ச்சி” : Special Entry கொடுத்த பாலா - இணையத்தை கலக்கும் கார்த்தியின் ’விருமன்’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு பிறகு அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தி நடிக்க இருக்கும் படத்தை தயாரிக்க உள்ளார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு ‘விருமன்’ என தலைப்பு வைத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 2022ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘விருமன்’ படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இதனையடுத்து, பல தரமான படங்களை தயாரிக்கும் சூர்யாவின் 2D நிறுவனம் மூலம் எனது மகள் அறிமுகமாவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், அதற்கு சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு நன்றி என்றும் இயக்குநர் ஷங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது முதல் படத்துக்கு அதிதி தயாராகிவிட்டார். அவருக்கு ரசிகர்கள் அன்பு மழை பொழியவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, “மண் சார்ந்த கதைகள் என்றுமே என் மனதிற்கு நெருக்கமானவை. அதிலும் மீண்டும் முத்தையாவுடனும், யுவனுடனும் இணைவது பெரும் மகிழ்ச்சி!” என நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், விருமன் படத்தின் வேலைகள் இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பாலா, ஷங்கர் என பலரும் பங்கேற்றனர். இது தொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக பருத்தி வீரன் தொடங்கி சுல்தான் வரை ஒரு இயக்குநருடன் மீண்டும் இணையாத கார்த்தி, கொம்பன் படத்துக்கு பிறகு மீண்டும் முத்தையாவுடன் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories