சினிமா

கடைக்குட்டி சிங்கம் பாணியில் மீண்டும் கார்த்தி - சூர்யா : வெளியானது புது அப்டேட்!

கடைக்குட்டி சிங்கம் பாணியில் மீண்டும் கார்த்தி - சூர்யா : வெளியானது புது அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோலிவுட் முன்னணி நடிகர் சூர்யா சமூகநல கருத்துள்ள படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல கதைகளை தயாரிக்கவும் செய்து வருகிறார். இவரின் தயாரிப்பில் இதுவரை 36 வயதினிலே, பசங்க 2, 24, கடைக்குட்டி சிங்கம், உறியடி 2, சூரரைப் போற்று ஆகிய படங்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளது.

அடுத்தடுத்து ஜெய் பீம், உடன்பிறப்பு, ஓ மை டாக், ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து சூர்யா மீண்டும் கார்த்தி நடிக்க இருக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

டைரக்டர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கும் படத்தை சூர்யாதான் தயாரிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி இப்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார்’ மற்றும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த பிறகு முத்தையா படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories