சினிமா

அட்லீ படத்தில் 'தங்கல்' நடிகை... விரைவில் தொடங்குகிறது கிருத்திகா உதயநிதியின் புதிய படம்! #CinemaUpdates

தமிழில் இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் கிருத்திகா உதயநிதி.

அட்லீ படத்தில் 'தங்கல்' நடிகை... விரைவில் தொடங்குகிறது கிருத்திகா உதயநிதியின் புதிய படம்! #CinemaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அட்லீ - ஷாருக்கான் படத்தில் 'தங்கல்' பட நடிகை!

கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்துவரும் அட்லீ பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை இயக்கவிருப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக பல தகவல்கள் இணையத்தில் வைரலாகின. இந்தப் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்‌ஷன் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங்கை விரைவில் துவங்கவுள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஷாரூக்கான், நயன்தாராவோடு பிரபல பாலிவுட் நாயகி சான்யா மல்ஹோத்ரா இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அட்லீக்கும் ஷாருக்கானுக்கும் மிகமுக்கியமான படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அட்லீ படத்தில் 'தங்கல்' நடிகை... விரைவில் தொடங்குகிறது கிருத்திகா உதயநிதியின் புதிய படம்! #CinemaUpdates


விரைவில் துவங்கவிருக்கும் கிருத்திகா உதயநிதியின் புதிய படம்!

தமிழில் இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் கிருத்திகா. காளிதாஸ் ஜெயராம் லீட் ரோலில் நடிக்கவிருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தான்யா நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏற்கனவே படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்திற்கான ஷூட்டிங்கை கொரோனா பரவல் குறைந்தபின் நடத்தத் திட்டமிட்ட இவர்கள் சமீபத்தில் ஒன்றாக கூடி பேசியுள்ளனர். அதற்கான போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. திடீரென படக்குழுவை சந்தித்து கிருத்திகா பேசியதால் விரைவில் இந்தப் படத்திற்கான ஷூட்டிங் வேலைகளை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லீ படத்தில் 'தங்கல்' நடிகை... விரைவில் தொடங்குகிறது கிருத்திகா உதயநிதியின் புதிய படம்! #CinemaUpdates


மம்முட்டியின் புதிய படத்தின் வேலைகள் துவங்கியது!

மம்முட்டி நடிப்பில் அடுத்து உருவாகவிருக்கும் படத்திற்கு ‘புழு’ என தலைப்பு அறிவிக்கப்பட்டு அந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளும் பூஜையோடு துவங்கியுள்ளது. புதுமுக இயக்குனர் ரத்தின ஷர்ஷாத் இயக்கும் இந்தப் படத்தில் மம்முட்டி ஜோடியாக பார்வதி ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வேஃபெரர் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். இந்த படத்தை கேரளாவின் முக்கிய படப்பிடிப்பு தளங்களான எர்ணாகுளம் மற்றும் குட்டிக்கானம் ஆகிய இடங்களில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

    banner

    Related Stories

    Related Stories