சினிமா

முடிவுக்கு வந்தது நீண்டநாள் பேச்சுவார்த்தை: அஜித் 62 இயக்கப்போவது யார்? - சினிமா அப்டேட்ஸ்!

முடிவுக்கு வந்தது நீண்டநாள் பேச்சுவார்த்தை: அஜித் 62 இயக்கப்போவது யார்? - சினிமா அப்டேட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அஜித்தின் அடுத்தபட இயக்குனர்?

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருப்பதாக பரவலாக பேசப்பட்ட நிலையில் புதியதாக ஒரு தகவல் இது குறித்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் அடுத்தப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. முன்னதாக சுதாவின் இயக்கத்தில் தமிழில் வெளியான இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த காம்போ இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாகவும் இருந்து வருகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெளியானது ‘துக்ளக் தர்பார்’ பட பாடல்கள்!

விஜய்சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை லலித்குமார் தயாரித்துள்ளார். தியேட்டர்கள் திறப்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பதால் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் நேரடியாக டிவியில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் கோவிந்த் வசந்தாவின் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது.

ஓடிடியில் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’!

கோலிவுட்டின் முன்னணி காமெடியனாக இருந்த சந்தானம் ஹீரோவான பிறகு சில ஏமாற்றங்களை சந்தித்தார். ஆனாலும் அவருக்கான பட வாய்ப்பு குறையவில்லை. இப்போது இவர் கைவசம் டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், சபாபதி என ஏராளமான படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படங்கள் அனைத்துமே ஓடிடியில் வெளியாக இருப்பதாக கோலிவுட்டில் பரவலா பேசப்பட்டு வருகிறது. இதில் ‘சபாபதி’ படம் சோனி லிவ் தளத்திற்கு விற்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

அதை தொடர்ந்து கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகிருக்கும் டிக்கிலோனா படம் ஜீ5 தளத்திற்கு விற்கப்பட்டிருப்பதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தில் சந்தானம் ஜோடியா அனகா மற்றும் ஷிரின் நடித்துள்ளனர். இவங்களோடு யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், ஷாரா உள்ளிட்ட பலர் காமெடியில் அசத்தியுள்ளனர். நல்ல கமர்ஷியல் படமாக உருவாகிருக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஷ்பெஷலாக ஜீ5 தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories