சினிமா

ரஷ்யாவுக்கு பறக்கும் பீஸ்ட் படக்குழு? சிக்கலில் இருந்து மீண்ட காத்துவாக்குல ரெண்டு காதல் - சினி அப்டேட்ஸ்

ரஷ்யாவுக்கு பறக்கும் பீஸ்ட் படக்குழு? சிக்கலில் இருந்து மீண்ட காத்துவாக்குல ரெண்டு காதல் - சினி அப்டேட்ஸ்
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. ‘பீஸ்ட்’ ஷூட்டிங் அப்டேட்..!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சென்னையில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் வரும் 23ஆம் தேதி முடிவுக்கு வரவுள்ளது, அதனை தொடர்ந்து இவர்கள் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கான சரியான தேதி இன்னும் கிடைக்காததால் படக்குழு பொறுமை காத்து வருவதாக கூறப்படுகிறது. ரஷ்யாவில் படத்தின் முக்கியமான சண்டைக் காட்சிகள் படமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவுக்கு பறக்கும் பீஸ்ட் படக்குழு? சிக்கலில் இருந்து மீண்ட காத்துவாக்குல ரெண்டு காதல் - சினி அப்டேட்ஸ்

2. காத்துவாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங் அப்டேட்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் இந்த படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் கொரோனா காரணமாக தடைப்பட்டது. அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நடிகர்கள் கால்ஷீட் காரணமாக சிக்கலில் இருந்து வந்தது. தற்போது அனைத்து சிக்கல்களும் தீர்ந்து இறுதிக்கட்ட ஷூட்டிங் வேலைகள் துவங்கி நடைப்பெற்று வருகிறது. இந்த ஷெட்யூல் முடிந்த பிறகு செப்டம்பரில் படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

3. சசிக்குமாரின் புதிய படம்!

சசிக்குமார் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியானாலும் எந்த படமும் பெரிதாக அவருக்கு கைக்கொடுக்கவில்லை. தற்போது இவர் கைவசம் ஆறு படங்கள் ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சசிக்குமார், செந்தூர் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் ஒரு புதியப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கனவே செந்தூர் ஃப்லிம்ஸ் தயாரிப்பில் இவர் நடித்த ‘ராஜவம்சம்’ இன்னும் வெளியாகத நிலையில் அதே நிறுவனத்திற்கு அடுத்தபடம் நடிப்பது கோலிவுட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை கழுகு, கழுகு 2 ஆகிய படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கவுள்ளார், சசிகுமார் ஜோடியாக ஹரிப்பிரியா நடிக்கிறார். விரைவில் இவர்கள் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories