சினிமா

‘ஹிப்ஹாப் தமிழா’ யூடியூப் சேனலை ஹேக் செய்த மர்ம நபர்கள்... வீடியோக்கள் நீக்கம்... கவலையில் 2K கிட்ஸ்!

இசையமைப்பாளரும் நடிகருமான ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் யூ-ட்யூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

‘ஹிப்ஹாப் தமிழா’ யூடியூப் சேனலை ஹேக் செய்த மர்ம நபர்கள்... வீடியோக்கள் நீக்கம்... கவலையில் 2K கிட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

20 லட்சம் சப்ஸ்கிரைபர்களைப் பெற்ற ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் யூ-ட்யூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிப்ஹாப் இசை மூலம் பரவலான கவனம் பெற்ற ஆதி, பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

Hiphop Tamizha என்ற பெயரில் யூ-ட்யூப் சேனலை நிர்வகித்து வந்த ஆதி, பாடல்கள், வீடியோக்கள் போன்றவற்றை இப்பக்கத்தில் பதிவேற்றி வந்தார். இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதியின் யூ-ட்யூப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அவரது சேனலில் இருந்த வீடியோக்களும் அழிக்கப்பட்டுள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்த ஹிப்ஹாப் தமிழா தரப்பினர், முடக்கப்பட்ட யூ-ட்யூப் சேனலை மீண்டும் கொண்டுவர முயற்சி செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2K கிட்ஸின் விருப்பமான இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதியின் யூ-ட்யூப் பக்கம் முடக்கப்பட்டது சமூகவலைதளங்களில் விவாதப்பொருளாகி உள்ளது.

சமீபத்தில் நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டு, அவரது ட்வீட்கள் நீக்கப்பட்டதோடு சுயவிவரங்களும் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார், குஷ்புவின் ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்தனர்.

banner

Related Stories

Related Stories