இந்தியா

“நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தனிநபர் மசோதா தாக்கல்.. அவையில் பெருகும் ஆதரவு” : அசத்தும் தி.மு.க எம்.பி!

எம்.பிக்களுக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி தி.மு.க எம்.பி வில்சன் மாநிலங்களவையில் இரண்டு முக்கியமான தனிநபர் மசோதாக்களை கொண்டு வந்துள்ளார்.

“நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தனிநபர் மசோதா தாக்கல்.. அவையில் பெருகும் ஆதரவு” : அசத்தும் தி.மு.க எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ‘நீட்’ என்னும் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் எல்லா மக்களுக்கும் ‘நீட்’ தேர்வு சமவாய்ப்பு வழங்கவில்லை என்பதை தமிழ்நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கிராமப்புற மற்றும் ஏழைகளின் மருத்துவக்கனவை சிதைப்பதாக ‘நீட்’ அமைந்துள்ளது என்று தமிழ்நாடு அரசு எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்து வருகிறது. தி.மு.க அரசு தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாகாரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து, விலக்கு அளிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்தினார். இதுதவிர தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் டெல்லி சென்று, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்தித்து இதேகோரிக்கையை வலியுறுத்தினார்.

நீதிபதி ஏ.கே.ராஜன் குழு ‘நீட்’ தேர்வினால் தமிழகத்தில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழக மக்களிடம் கருத்துக் கேட்டு தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தை அணுக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கழக எம்.பி.க்களும், அதன் கூட்டணி கட்சி எம்.பி.களும், தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு, உச்சநீதிமன்றத்தில் கிளை அமர்வுகளை அமைக்கக்கோரியும் தி.மு.க எம்.பி.வில்சன் மாநிலங்களவையில் தனி நபர் உருவாக்கும் வகையிலான இரண்டாவது மசோதாவை அவர் கொண்டுவந்துள்ளார்.

எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டு புதிய சட்டம் கொண்டு வருவதற்கான தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்யலாம்.

இதன்மூலம் எந்த ஒரு பிரச்சினை குறித்தும், புதிய சட்டத்தையோ அல்லது சட்ட திருத்தத்தையோ கொண்டு வருவதற்கான மசோதாக்களை தாக்கல் செய்ய எம்.பி.க்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் கழக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் இரண்டு முக்கியமான தனிநபர் மசோதாக்களை கொண்டு வந்துள்ளார். இதில் ஒன்று ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரும் மாநிலங்களுக்கு நீட் விலக்கு அளிக்க வகை கோரும் மசோதாவாகும். இதேபோல் உச்சநீதிமன்ற கிளைகளை உருவாக்கும் வகையிலான இரண்டாவது மசோதாவையும் அவர் கொண்டு வந்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் அதிகாரத்தை வரையறுக்கும் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்து சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்கவேண்டும் என்று தனிநபர் மசோதாவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த இரண்டு தனிநபர் மசோதாக்களும் பல மாநிலங்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றன. எனவே இந்த மசோதாக்களுக்கு பலத்த ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தி.மு.க எம்.பி வில்சன் கடந்த 2 வருடங்களில் நாடாளுமன்றத்தில் தனது செயல்திறன் பற்றி தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் செயல்திறன் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இதுகுறித்து பி.வில்சன் எம்.பி., தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்றத்தில் எனது 2 வருடங்களுக்கான செயல்திறன் அறிக்கையை தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தேன். 97% வருகை, 3 குழுக்களில் 100% வருகை, 91 விவாதங்கள், 75 நாடாளுமன்றத்தில் கேள்விகள், 10 சிறப்பு கவனஈர்ப்பு விவாதம் மற்றும் 3 தனிநபர் மசோதா #NEET ரத்து உள்பட.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க எம்.பி பி.வில்சன் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories