சினிமா

சிம்பு படத்திற்கு கதை எழுதும் ஜெயமோகன்... புதிய சாதனை படைத்த ‘ரவுடி பேபி’ பாடல்! #CINEUPDATES

கவுதம் மேனன் இயக்கும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்திற்கு ஜெயமோகன் கதை எழுத இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிம்பு படத்திற்கு கதை எழுதும் ஜெயமோகன்... புதிய சாதனை படைத்த ‘ரவுடி பேபி’ பாடல்! #CINEUPDATES
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கவுதம் மேனன் - சிம்பு படத்திற்கு கதை எழுதும் ஜெயமோகன்!

கவுதம் மேனன் - சிம்பு மூன்றாவது முறையாக இணைய இருக்கும் படம் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’. இந்தப் படத்திற்க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்னேஷனல் நிறுவனம் தான் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது. இந்த மாத இறுதியில் இந்தப் படத்துக்கான ஷூட்டிங் வேலைகளை சென்னையில் படக்குழு துவங்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போது இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளரான ஜெயமோகனும் சேர்ந்து கதை எழுத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயமோகன் ஏற்கனவே தமிழில் பல படங்களுக்கு கதை எழுதியுள்ளார். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

சிம்பு படத்திற்கு கதை எழுதும் ஜெயமோகன்... புதிய சாதனை படைத்த ‘ரவுடி பேபி’ பாடல்! #CINEUPDATES

சிவகார்த்திகேயனின் ‘வாழ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!

2017ல் புதுமுக இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் ‘அருவி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அதிதி பாலன் நடிப்பில் வெளியான இந்த படம் கோலிவுட் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவமாக அமைந்தது. அந்த படத்தை தொடர்ந்து அருண் பிரபு இயக்கத்தில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகியிருக்கும் படம் ‘வாழ்’. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகிருக்கும் இந்த படம் 100 இடங்களில் 75 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

தியேட்டர் ரிலீஸ் இப்போது இருக்கும் சூழலில் சாத்தியம் இல்லை என்பதால் படத்தை ஓ.டி.டியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்தது. அதன்படி வரும் 16ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் டீஸர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலாகிருந்தது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிம்பு படத்திற்கு கதை எழுதும் ஜெயமோகன்... புதிய சாதனை படைத்த ‘ரவுடி பேபி’ பாடல்! #CINEUPDATES

தனுஷின் ‘ரவுடி பேபி’ பாடலின் புதிய சாதனை!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த 2018-ல் வெளியான திரைப்படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள்கிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதிலும் ‘ரவுடி பேபி’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடலுக்கு பிரபு தேவா கோரியோகிராஃபி செய்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தார்.

யூட்யூப்பில் வெளியான இந்த ரவுடி பேபி பாடல் வீடியோ தொடர்ந்து நிறைய சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரையில் அந்த பாடல்கள் 110 கோடி பார்வைகளை தாண்டியுள்ளது. இந்தநிலையில் ரவுடி பேபி பாடல் வீடியோ யூட்யூப்பில் 5 மில்லியன் லைக்குகள் பெற்று புது சாதனையை படைத்துள்ளது. தென்னிந்திய அளவில் வெளியான பாடல்களில் 5 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் பாடல் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories