சினிமா

ஜூலை இறுதியில் வலிமை அப்டேட்? தேசிய விருது பெறுவார் ஆண்ட்ரியா - இயங்குநர் ஆருடம் : கோலிவுட் பைட்ஸ்

ஜூலை இறுதியில் வலிமை அப்டேட்? தேசிய விருது பெறுவார் ஆண்ட்ரியா - இயங்குநர் ஆருடம் : கோலிவுட் பைட்ஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1.ஜூலை இறுதியில் வலிமை பட ஷூட்டிங் துவக்கம்?

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எஞ்சியிருக்கும் ஒரு வார ஷூட்டிங்கை ஜூலை மாத இறுதியில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் வலிமை படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மீதமிருக்க காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக இந்தியாவிலே ஷூட்டிங்கை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த முழுமையான விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

ஜூலை இறுதியில் வலிமை அப்டேட்? தேசிய விருது பெறுவார் ஆண்ட்ரியா - இயங்குநர் ஆருடம் : கோலிவுட் பைட்ஸ்

2. ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கும் வெப் சீரியஸில் அருண் விஜய்?

சினிமா துறையில் 75 வருடங்களுக்கும் மேலாக படத் தயாரிப்பில் இருந்து வரும் முன்னணி நிறுவனம் ஏ.வி.எம். கடந்த சில வருடங்களாக படத் தயாரிப்பில் இருந்து விலகி இருந்த இவர்கள் தற்போது பிரபல ஓடிடி நிறுவனத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். திரைப்பட பைரசி கும்பலை மையமாக வைத்து உருவாகவிருக்கும் தொடருக்கு ‘Tamil Stalkers’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இதில் அருண் விஜய்யை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. மேலும் தமிழில் ஈரம், வல்லினம், ஆறாது சினம் மற்றும் குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் தான் இந்த வெப் சீரிஸை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது அறிவழகன் - அருண் விஜய் காம்போவில் ‘பார்டர்’ படம் உருவாகி வருகிறது. இதனால் இந்த காம்போவை வெப் சீரிஸ்க்கு பயன்படுத்திக் கொள்ள ஏ.வி.எம் திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த வெப் தொடர் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

3. ‘பிசாசு 2’ படத்திற்காக ஆண்ட்ரியா தேசிய விருது பெறுவார் - மிஷ்கின்..!

வழக்கமாக பேய் படங்கள் என்றாலே அந்த படம் முழுக்க அந்த பேய் பழிவாங்குவதும், மற்றவர்களை கொல்வதுமாக தான் இருக்கும், ஆனால் மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்தில் பேயை ஒரு விசித்திர கோணத்தில் காட்டியிருந்தார். அந்த முயற்சி அவருக்கு நல்ல முறையில் கைக் கொடுத்தது. படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் ‘பிசாசு 2’ எனும் தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.

மேலும் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோரும் நடிச்சிருத்துள்ளனர். இவர்களோடு நடிகர் விஜய் சேதுபதி ஒரு சிறிய கவுரவ தோற்றத்திலும் நடித்துள்ளார். இந்த படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசிய இயக்குனர் மிஷ்கின் “பிசாசு 2 படத்திற்காக நடிகை ஆண்ட்ரியா மிக கடுமையாக உழைத்துள்ளார், சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார், படம் நிச்சயம் வெற்றிப்பெரும், அதுமட்டுமின்றி இதில் நடித்ததற்காக ஆண்ட்ரியாவிற்கு தேசிய விருது கூட கிடைக்கும்” என கூறி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories